ஹைக்கூ – 95

ன் எழுதுகோலை
பிடுங்கிக் கொள்வதாய்
எதிரே நின்று –
நிறைய பறவைகள் கத்துகின்றன;

என்னை பற்றியும்
எழுது – என்கின்றனவா,
என்னிடம் –
பாடம் கேள் என்கின்றனவா
புரியவில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 94

குடிசையின் –
இருட்டை ஒழிக்க
ஒரு சிமினி விளக்கிடம்
போராடி தோற்கிறது
பத்து பாத்திரம் தேய்த்து வாங்கிய
பத்தோ இருபதோ!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 93

ண் –
குவிந்தும் கெட்டிப் பட்டும்
நிறைய வீடுகள் ஆயின;

வீடுகளில் –
எத்தனை வீடுகளோ(?)
குவிந்த மண் எத்தனையோ(?)

நிறைய வீட்டிற்கும்
நிறைய மனிதனுக்கும்
அதை பற்றியெல்லாம்
சிந்தனையேயில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –92

தெருவோரம் பறக்கும்
ஒரு –
பட்டாம் பூச்சிக்கு
இருக்கிறது போல் சுதந்திரம்
எனக்கில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ –91

ச்சை பச்சையாய்
நிறைய மரங்கள்
நிர்வாணம் புரிந்தும்
வேறுபட்டுப் போகிறேன் நான்
மரத்திடம்!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்