ஹைக்கூ –74

வசர வாழ்வின்
எங்கேனும் ஒரு புள்ளியில்
மனசு தேடாமலில்லை –
உன்னை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –73

றவுகளின்
உயிரில்லா வார்த்தைகளில்
உயிர்கொள்கிறது
தனிக் குடித்தனம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –72

ரு தலைகீழ் உலகின்
நேரான பார்வை கொள்கையில்
தாராள பட்டம் பெறுகிறது சுயம்
பயித்தியமென்று!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

நவீன பொங்கல்!

ன்று தைப்பொங்கல்.
எல்லோரும் ஓடி
தொலைகாட்சி முன் அமர்ந்துக் கொண்டோம்;

நான் எட்டி சாமியை பார்த்தேன்
சாமியால் எங்களையோ
தொலைகாட்சியையோ
சபித்துவிட முடிய வில்லை ;

‘பொங்கலோ பொங்கல்’
தொலைகாட்சி நிகழ்ச்சியில் கத்துகிறார்கள்;

சாமி வெளியே வந்து
எட்டிப் பார்கிறார்
காஸ் ஸ்டவ்வில்லிருந்து
பொங்கல் வெந்துவிட்டதென குக்கர் சத்தம் போட்டது;

சாமி கரும்பை தேடினார்
கரும்பு தோலுரிக்கப் பட்டு
துண்டு துண்டாக வெட்டி
பாலித்தின் பையில் போட்டு
சூப்பர் மார்க்கட்டில் விற்றதை
வாங்கி வந்து பிரிட்ஜில் வைத்ததாக
நான் சாமியிடம் சொல்லவே இல்லை;

சாமி வராண்டாவிற்கு வந்து
எங்கே மாடு.. வயக்காடு..
எதையுமே காணோமே என்றார்
என்னால் சாமியை –
சபித்துவிட முடியவில்லை

சாமி இன்னும் –
அந்த காலத்துலயே இருக்கு!
———————————————————
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 2 பின்னூட்டங்கள்

பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்!

மிழன் வாழ்ந்த வரலாறு
தரணிக்கெல்லாம் தகராறு;
பொங்கலோ பொங்கல்!

ஆறு போகம் வெளஞ்ச மண்ணில்
வீரமெங்கே போச்சிதோங்க
பொங்கலோ பொங்கல்!

நாட்டுநடப்பு நாறுது; எல்லாம் விலையும் ஏறுது
வயித்து பொழப்பு நடக்கலையே
பொங்கலோ பொங்கல்!

தமிழன் தானே ஆளுறான்
தமிழன் தானே சாகுறான்
கேட்க நாதி ஒண்ணுமில்லே
பொங்கலோ பொங்கல்!

பழைய கந்த கொளுத்தல
பானை கூட வாங்கல
கேஸ் ஸ்டவ்வு நெருப்புல கலாச்சாரம் எரியுதே
பொங்கலோ பொங்கல்!

காலம் மாறி போச்சிடா
விதியை நம்பும் வாழ்க்கைடா
இளைஞனெல்லாம் தூங்குறானே
பொங்கலோ பொங்கல்!

கரும்பு பாக்கெட் பையில
மஞ்ச கொத்து கிடைக்கல
மாடு கழுவி வணங்கலடா
பொங்கலோ பொங்கல்!

ஏறு புடுச்சி உழுவுல
வயல கூட காணல
ஈர வயிறும் காயலடா
பொங்கலோ பொங்கல்!

ஏழை வாழ்வு மாறலை
ஜாதி வெறி ஒழியல
தமிழன் ஓட்டம் நிக்கலடா
பொங்கலோ பொங்கல்!

ஈழ தமிழ் நாட்டுல –
ரத்த ஆறு ஓடுது
ரத்த ஆறு ஓடுது

முள்ளுக் கம்பி மேல தான்
பிள்ளைகுட்டி சாகுது

லிட்டர் பாட்டில் தண்ணில
தமிழன் குடும்பம் குளிக்குது

லச்சம் லச்சம் உயிருடா
போன இடம் தெரியலடா
பொங்கலோ பொங்கல்!

சிங்களந்தான் ஆளுறான்
சீனன் கூட ஆடுறான்
இந்தியாவின் துரோகத்தில
ஈழத் தமிழன் சாகுறான்

மெத்தனமா கும்பிடுவோம்
மொத்தப் பேரும் ஒழிஞ்சிடுவோம்
உலக படம் வரையும் பொது
தமிழனை தான் தேடிடுவோம்

பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!!
———————————–
வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக