‘ஹேப்பி பொங்கலி’ன் சப்தம்;

மிழன் –
மல்லாக்கப் படுத்து
வானம் பார்த்து துப்பிய
எச்சில் சிதறல்களில் – கேட்கிறது
‘ஹேப்பி பொங்கலி’ன் சப்தம்;

திரும்பி படு தமிழா
படுத்தது போதும் எழுந்து நில்
நிமிர்ந்து வானம் பார்
துள்ளி பூத்து பிரகாசிக்கும் –
சூரிய வெளிச்சத்திற்கு –
நன்றியறிவிக்கும் பொங்கலை பார்த்து
பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்
எனக் கூவு………….
வாழ்வு பொங்கட்டும்!

அனைத்து அன்புள்ளங்களுக்கும் அழகிய தமிழில் வாழ்த்தறிவிக்க வேண்டி –

அன்பு நிறைந்த என் பொங்கல் தின வாழ்த்தினையும் தெரிவிப்பவனாய்…

வித்யாசாகர்

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

வெள்ளை வானத்தின் மவுனத்திலிருந்து..

வெள்ளை வானத்தின்
மவுனத்திலிருந்து –
பீரிட்டு வரும்
சூரியக் கதிர்களைப் போல் – தான்
வரவேண்டும் –
ஒவ்வொரு தமிழனுக்கும்
அவனுக்கான தமிழ்பற்று!

அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | 4 பின்னூட்டங்கள்

பணம் தின்னி; பட்டுப் புடவை (6)

ட்டுப் புழுவின்
உயிரில் நெய்த
ஆபரண ஆடை!

யிரம் லட்சம்
உயிர்களை கொன்ற
கொலை வியாபாரம்!

ன் ஏழை சகோதரிக்கு
என்றுமே கிடைக்காத
கனவு அவதாரம்!

ன் தாயை
கொள்ளியில் வைத்த பிறகும்
எரிந்திடாத பட்டுப் புடவை!
———————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

தந்தை திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கு சமர்ப்பணம்

ரு வரலாற்றின்
இரத்தம் பாய்ச்சி –
உயிர் தந்த கோடியே;

முடங்கிப் போன இனத்திற்கு
முழக்கம் கொடுத்த –
உயிர்மூச்சே;

உலகின் எல்லை கோடு வரை
ஈழம் – தலைநிமிர
தலைமகனை தந்த வரமே;

தேசியம் கற்பிக்க
எங்கள் தேசியத் தலைவனை
பெற்றெடுத்த பேரே;

உன் மூடிய கண்களிலிருந்து
எந்த சுதந்திரம் –
எங்களுக்காய் பிறக்குமோ பிறக்கட்டும்;

விடுதலை காற்றின்
இலட்சிய மூச்சு – உன் மூச்சென
உலகம் அறியட்டும் –
அறியாமல் போகட்டும்;

உன் மரணமென்னும்
ஒற்றை வார்த்தையின்
இரட்டை அர்த்தம் –
உலகிற்கே புரியட்டும்!
——————————-
வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு நாளின் மவுனங்களில்

ரு நாளின்
மவுனங்களில் உனக்காக
சேமித்து வைத்துள்ளேன்
உனக்கான குரலை –

ஒரு அன்பு வணக்கம் சொல்ல!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக