ஹைக்கூ –79

யாருக்காக
நான் சேர்த்தேனோ
தெரியவில்லை
அடுக்கு மாடி கட்டிடத்தின்
மண் மட்டுமே –
என் இறப்பை மூடியது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –78

ங்கோ என்றோ
யாருடனோ பேசிய
நினைவுடனே தேடுகிறேன்
யார் யாரோ எதிரில் வருகிறார்கள்
யாருமே –
நான் தேடியவரல்ல!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –77

பிடிக்கவில்லை என
ஒரு முறை
சொல்லியாவது விடு;
நீ பேசியதை –
குறிப்பெடுத்துக் கொள்கிறேன்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –76

ரு காதல்
கடிதமெழுதிடாத
உன் பார்வையில் தான்
நான் பெரிய புள்ளியாய்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –75

ப்படி எல்லாம்
நினைத்துக் கொண்டாயோ
நினைப்பாய் என்பதை மட்டும்
நினைத்துக் கொள்கிறேன் நான்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக