ஹைக்கூ – 57

சுற்றி சுற்றி அலைந்ததில்
எல்லாம் கிடைத்துவிட்டது
எல்லாம் பார்த்தாகிவிட்டது
என்னை தவிர!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 56

முடியும் முடியாதென
என்னென்னமோ செய்கிறேன்
எல்லாம் முடிகிறது
நானும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 55

எதையோ அழித்ததில்
ஏதோ அழிந்து போனதும்
‘நான்’ மட்டும்
எல்லோருக்குள்ளும் அப்படியே!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 54

நான் –
நானென்று நினைத்ததில்
மறைந்து போனது
நீயென்பதும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 531

எத்தனையோ பொய்கள்
நம் சம்பாசனையில்
பொதிந்து போயும் –
உண்மை பேசுவதாகவே
சொல்லிக் கொள்கிறேன் என்னை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக