என் காதலை
என்னை விட என்
எழுதுகோல் –
அழுத்தமாக சொல்கிறது;
அதனால்
இதோ –
என் எழுதுகோல்
உனக்கே பரிசாக!
என் காதலை
என்னை விட என்
எழுதுகோல் –
அழுத்தமாக சொல்கிறது;
அதனால்
இதோ –
என் எழுதுகோல்
உனக்கே பரிசாக!
நீபார்த்து
பேசி
சிரித்த நாட்களில்
நாட்காட்டி எனக்கு
அவசியப் பட்டிருக்க வில்லை தான்!
கோடி பூக்கள்
தரையில் வீழ்ந்து
காய்ந்தும் –
எனக்கான பூக்கள்
பூக்குமென்றே காத்திருக்கிறது மனசு!
வாழ்வின் ஒரு
சொட்டுக் கண்ணீராவது
வெற்றி கொள்வதில்
துளிர்த்து விடுகிறது நம்பிக்கை!
உன்னை நானும்
என்னை நீயும்
நட்பென அறிவித்த
தருணம் நம்பிக்கையானது!