ஹைக்கூ – 38

வாசலில் தெளித்த
உன் கண்ணீரில்
ஈரமானது என் இதயம்!

Posted in சின்ன சின்ன கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 37

ஒரு பனைமர
உயரத்திற்கு
நெட்டி வீழ்கிறது –
என் திருமணக் கனவு;
முதிர்கன்னி!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 36

உன் கெட்டிமேள
சப்தத்தில் –
யாருக்குமே கேட்கவில்லை
நான் கத்தி கத்தி அழுதது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 35

பத்து கொலை
பன்னானாம்
பதினோராவது கொலையில்
திறமையாக பிடித்துவிட்டது போலிஸ்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 34

கடன் தொல்லையில்
நூத்துக்கு பத்து
வட்டியை தாண்டி
தூக்கமும் போனதே!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக