ஹைக்கூ – 23

மேய்ந்து கொண்டிருந்த
கோழியை துரத்திப் பிடித்து
கழுத்தை அறுத்து
தோலை உரித்து
கண்டம் துண்டமாக வெட்டி
வறுத்து தின்று விட்டு
ஏப்பம் விடுகையில்
கொலையற்று போகிறது
ஒரு உயிரின் இழப்பு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 22

கற்காலத்திலிருந்து
நெற்காலத்திற்கு வந்து
பொற்காலமாக மாறுமென நம்பி நம்பியே
முடிகிறது நம் காலம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 21

வழிக்க வழிக்க
முளைக்கிறது
தாடியும் சாதியும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 20

சுற்றி சுற்றி
ஒரு கூடை பழம் விற்ற
கிழவியின் சிரிப்பை
திருடித் தான் கொள்கிறது
கால்வலி!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 19

போ..போ..
நீ பார்க்கும்
ஓரக் கண் பார்வையால் தான்
என் பெயர் –
தெரு பொருக்கி
ஊதாரி’ யானது!.

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக