Tag Archives: இனம்

21 மாவீரர்களுக்கு என் வீர வணக்கம்..

கனவுகளை சேகரிப்போம் காடுபோல கூடி நிற்போம் விடுதலையை வென்றெடுப்போம் பட்ட அடியில் பாடம் கற்று – அடிமை வாழ்வை தகர்த்தெறிவோம்; சமத்துவத்தை சொல்லி – தமிழர் பண்பில் மிஞ்சி எதிரி கூட எஞ்சி வாழ சீர் திருத்தம் போதிப்போம் தோல்வி விரட்டி; வீரம் செறிந்து; வெற்றி வெற்றியென்று பாடுவோம்!! ———————————————————————- வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

20 அன்பு அண்ணன் பிரபாகரனுக்கு வாழ்த்து!!

எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை விடுதலையை – எம் உணர்வை – மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே; வாழ்வின் வெற்றிதனை – விடுதலை வேட்கையாகக் கொண்டு – மொழி உணர்வை தமிழ் உணர்வென – என் கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே; வீழும் ஒரு தோல்வியில் கூட – பாடம் உண்டென மீண்டு – எமை … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள், வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

19 ஈழக் கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம்…!!

போராடி; தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் – ஊர்திரும்பா வேதனையில் ஈழக் கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட – ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி – மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் – சொட்டிய ரத்தம் எப்படி … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

18 விடுதலையின் வெள்ளை தீ; பிரிக்கேடியர் சுப. தமிழ்செல்வன்!!

உன் வாழ்க்கை கதைநூறு சொல்லும் முகமோ அத்தனையையும் ஒற்றைசிரிப்பில் வெல்லும், காலம் உன் களப்பணியை நினைவில் கொள்ளும் தமிழர் வாழும்வரை உன்புகழும் நில்லும்! வானம் தொடுங் காலம்வரை சமரிலும் அரசவை படையிலும் நீயே தூணானாய்; எங்களின் காலம் சொல்லா தீர்ப்பிற்கு – உன் மரணத்தால் ஒரு தோல்விசாசனம் எழுதிப் போனாய்! மீண்டும் வெற்றிமுரசு கொட்டும்வரை ஓயாது … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை – 18 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது.. “நஹி சோடேங்கே.. நஹி சோடேங்கே.. மர்னே தக் நஹி சோடேங்கே..” “நஹி சோடேங்கே.. நஹி சோடேங்கே.. மர்னே தக் நஹி சோடேங்கே..” “என்னடா சந்திரா இது இப்படி கத்துரானுங்க..” “தெரிலயே கொஞ்சம் நில்லு..” “ஸ்ட்ரைக் பன்றானுங்களா..?!!!!” “இருக்கும்” “அதுக்கு இப்படி கத்துரானுங்க?!!!!!!!!” “நீ பேசறது அவுங்களுக்கு புரியலைன்னா ‘உன்னையும் அவன் கத்துறதா … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக