Tag Archives: கதை

மலேசியாவின் ஐம்பது நூலகத்திற்கு வித்யாசாகரின் படைப்புகள்!!

தற்காலிகமாக கிடைத்த, பெருமைசெய்த ஐந்து விருதுகள் அதற்கான தன் மதிப்பினை கூடவே கொண்டு வந்ததா? அல்லது, காலம் இப்படி தான் வருத்தத்திற்குப் பின் மகிழ்வினையே தருமா எனும் வியப்பான வாழ்பனுபவத்தோடு இன்னொரு மகிழ்வினையும் உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் உறவுகளே!! என் படைப்புக்களில் எண்ணூற்றி ஐம்பது புத்தகங்களை மலேசியாவில் உள்ள ஐம்பது நூலகங்களுக்கு தருவதற்காக பணம் கொடுத்து … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நேரத்தை தின்ற நாள்காட்டியும், ராகுகாலமும் (சிறுகதை) மாதிரி!

அத்தை  அவசரம் அவசரமாக வெளியே செல்லப் புறப்பட்டாள் நான் அவள் பணப் பையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிற்க அத்தை தயங்கினாள். என்ன அத்தை என்றேன், “திங்கள் கிழமையில்ல இன்னைக்கு” என்றாள் அதனாலென்ன அத்தை, உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும் நீங்க போயிட்டு வாங்க என்றேன். “இல்லடி, மணி ஒன்பதுக்கு முன்னாடி இருக்கே இப்போ ராகுகாலம்ல?” … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்றின் ஓசை (10) தோல்வியில் வெற்றியென்றொரு அனுபவ பாடம்..

இதற்கு முன் நடந்தது.. வாழ்வின் சவால்கள் திறமைசாலிகளால் எதிர்கொள்ளப் படுகின்றன, எல்லாம் வென்று தான் விடுவதில்லை. வெல்லாத இடத்திலிருந்து வெற்றியை நோக்கும் மனிதனுக்கு புரிகிறது ‘தான் வீழ்ந்த இடங்களும் தோற்றதற்கான காரணங்களும். தோல்வியை புறந்தள்ளி வெற்றிக் குதிரையேறி உலகம் முழுக்க சவாரி பிடிக்க அந்த தோல்வியின் அனுபவம் பின் பாடமாகிறது. பாடங்கள் என்னவோ, ‘மாலனுக்கு எதிரே … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (9) குடும்பத்தின் வாச மலர்கள்..

இதற்கு முன் நடந்தது.. காக்கை குருவிகளின் எச்சத்தில் வீழ்ந்து யார் கண்ணிலும் படாமல் வளரும் மரம் போல, தானே மலரும் வாழ்வுமுண்டு. இன்னொரு புறம், வாங்கும் முன்னூறு ரூபாய்க்கு ஆறுநூறு கணக்கு போட்டும் ஆழக் கடலில் மூழ்கிய; கப்பலாய் கவிழ்ந்த குடும்பமும் உண்டு. அப்படி வாழ்க்கை; நாமொன்றாக நினைத்தாலும் அதொன்றாகவே வாழ்விக்கிறது நம்மை. மாலனின் கணக்குகளும் … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (8) மொரிசியஸில் இன்னும் பத்து நாள்..

இதற்கு முன் நடந்தது.. எங்கெல்லாம் தமிழனின் தலை கனகம்பீரமாக நிமிர்ந்து நிற்பதாக நிறைவு கொள்கிறோமோ; அங்கெல்லாம் இன்னொரு தமிழனின் தலையாவது அந்நியனால் நசுக்கப் படவே செய்கிறது. புடைசூழ்ந்து படை வென்ற தமிழர் இனம் தட்டிக் கேட்க ஆளின்றி சுட்டுப்பொசுக்கும் நிலைக்கானதே. முகம் பார்த்து பேச தகுதியற்றோர் கூட; பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வாழும் ஒரு இனத்தை … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்