Tag Archives: நீயே முதலெழுத்து..

35, குடிக்க கஞ்சும், கடிக்க அவ(ன்)படிப்பும்..

குளிக்கையில் சோப்பிடுகையில் கழுற்றில் சிக்கித் தான் கொள்கிறது; நேற்று உன் படிப்பிற்கென அடகுவைத்த அந்த தாலிக் கொடியின் நினைவு.. ———————————————————- கால்கள் சுடுகின்றன மீறி மிதிக்கிறேன் எனக்குச் செருப்பு வாங்கும் பணம் உனக்கு உடுப்பு வாங்க மீறுமென.. ———————————————————- அது – குவளை குவளையாக குடிக்காமல் சேமித்த தேனீருக்குரிய பணமென்று உனக்கெப்படித் தெரியும் ? உன் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

31, நீயும் நானும் இருவேறு சமப்பொருள்..

1 வீட்டிலிருந்து வெளிவருகிறாள் காதலென்றான் அவன், காதலி என்றாள் பைத்தியமானான் அவன், குழந்தை என்றாள் பெண்ணெனில் தேவதை என்றானவன், தங்கை என்றாள் உயிர்விட்டானவன், அக்கா என்றாள் அம்மாவிற்கு ஈடென்றான் அவன், அம்மா என்றாள் தெய்வமென்றான் அவன், மனைவி என்றாள்; அடிப்போடி… என்றெண்ணிவிட்ட இடத்தில் நெஞ்சு நனைக்கிறதந்த வேறுபாட்டு விஷம்.. ————————————————————– 2 அப்பாம்ம்மா தான் எனக்கு … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

21, அம்மாவும் அவளும்.. கூட நானும்!

அடப்போடா அது பொம்பளைங்க சமாச்சாரமென்று போட்டுவிட்ட வட்டத்தில் தான் ஆண்களின் பார்வையே மாறிப் போனதோ (?) அன்றொரு நாள் அவளுக்கு இடுப்பு வலி அருகே இருந்துப் பார்த்துகொள்கிறேன் உள்ளே வரும் அவள் அம்மா ‘நீங்க வெளியப் போங்க என்று என்னை அனுப்பி விட என்னம்மா நீ வருகிறாய் நீ போய் ஆட்டோ கூட்டி வா என்கிறாய், … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

20, பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்..

வயிற்றில் யாரோ கைவிட்டுப் பிசைந்ததுபோல் ஊறும் அடிவயிற்று நாற்றம் தொண்டைக்குப் பொங்கிவரும் வாந்தி வந்து வாந்தி வந்து பயமூட்டும் எதிரே சோற்றுத் தட்டினைக் கண்டாலே சகிக்க ஒப்பாத உணர்வு மேவும் எதையும் தாங்க முடியாமலே நாட்கள் கடந்து பின் கால்வீங்கும் நீட்டினால் மடக்கினால் நின்றால் அமர்ந்தாலும் வலிக்கும் இடுப்பு வலி உயிர்விட்டுப் போகும் அயர்ந்து அயர்ந்து … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..

காதல் கண்களில் ரத்தமாக வழிந்த நாட்களது, அந்த நமதான நாட்கள்.. மழை சுட்டதும் வெயில் நமை நனைத்ததுமான அன்றைய பொழுதுகள் பெரும் பொக்கிசமானவை.. இமைநிறைய கனவும் உயிர் நெடிய பயமுமாய் பதற்றமுற – நம் பிரிவை எண்ணி நாம் வாழ்ந்த அந்த நாட்கள் அத்தனையும் அத்தனை மரணத்திற்குச் சமமானவை.. நம்பிக்கையின் அடிவேரெடுத்து நம் மணப்பந்தல் தைத்த … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்