5) விடுதலையின் வெள்ளை தீ’ (GTV-யில் ஒலிபரப்பிய நம் கவிதை)

சொல்லி முடியா அர்ப்பணத்தின் வரலாறில் ஒரு பக்கமேனும் இக் கவிதை பகிர்ந்துள்ளதா தெரியாவிலை.

எனினும், கண்ணுக்கெதிரே சண்டையிடும் தர்மந்தனை கவ்வும் நரமனிதர்களை ஒன்றுமே செய்ய இயலாமல் நிற்கும் மரம்போல, எம் தியாக தீபங்கள் சாய்கையிலே மரமாய் நின்று; வெறும் காட்சியாய் கண்டு; எரிந்து போன கண்களின் ரத்தமாய் சொட்டிய கண்ணீர் துளிகள் இங்கே கவிதைகளாய்.. கவிதைகளாய் மட்டுமேனும்…

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in GTV - இல் நம் படைப்புகள் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 5) விடுதலையின் வெள்ளை தீ’ (GTV-யில் ஒலிபரப்பிய நம் கவிதை)

  1. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    இன்று காலை ஒரு சம்பவம்..

    என் கற்பனை மட்டுமல்ல கவிதையின் காணொளி வந்தது அதில் நான் பேசியிருந்த கவிதையின் அர்த்தம் தைத்து வீட்டில் உதவிக்கு வரும் சகோதரி கதறி கதறி அழுதார். பதினைந்து வருடமாய் நானும் நாடு விட்டு வீடு உறவு விட்டு திரிகிறேனேனே என்ன… பயன் கண்டேன் என்று அழுதார் ..

    அவர் கண்ணீரை என் கையினால் துடைத்து விட இயலாமல் என் கண்ணீரை மறைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

    இன்னும் கூட இறங்க வில்லை அச் சகோதரியின் அழுகையின் வெப்பம் என் மகனத்திலிருந்து. எரிக்கிறது என்னை..

    கவிதைகளோடு மட்டும் தகித்திருக்கிறேன்…

    அதுபோன்ற சகோதரிகளுக்காக நீளட்டும் என் கைகள். வெட்டுவார் வெட்டட்டும்..

    Like

பின்னூட்டமொன்றை இடுக