Monthly Archives: ஜனவரி 2012

30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்!!

ஒரு பானைப் பொங்கலிலே – நூறு பானை சந்தோசம்; பொங்கும் நூறு பானையிலும் – மணக்குதுப் பார் மண்வாசம்! மஞ்சக் கொத்துக் கட்டியதும் சிரிக்குதுப் பார் சூரியனும், வெந்தப் பானைக் குளித்ததுபோல் மினுக்குதுப் பார் வீடுகளும்! குருத்தோலைத் தோரணமும், கரும்பச்சை மாயிலையும் அறுத்தமர வாசலுக்கு அடிப்பச்சை பூசிவிடும், மஞ்சுவிரட்டுக் காளைகளும் – நீளம் சிவப்பு வண்ணஞ்சொலிக்கப் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பிறந்தநாள் பாடல் தமிழில் – இசை ஆதி!!

உறவுகளுக்கு வணக்கம், முன்பறிவித்திருந்தது போல் எங்களால் இயன்றவரையிலான முயற்சியில் பிறந்தநாள் பாடலை தமிழில் செய்துள்ளோம்… பாடல் கேட்டுவிட்டு கருத்துப் பதியுங்கள். காத்திருக்கிறேன். ஒரு கூடுதல் தகவல், சிலர் இப்பாடலை இத்தனைப் பெரிதாக இருப்பதாகக் கருதலாம். நாங்களும் கருதினோம். அதற்கான விளக்கம் யாதெனில் – நாமெல்லாம் பிறந்த தினத்திற்குப் பாடும் ஆங்கிலப் பாடல் வெறும் இரண்டு வரியிலானது … Continue reading →

Posted in பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

28) பிறிதொரு நாளில் பார்ப்போமெனில் அன்று பேசு..

காதல் வற்றிப்போன மனசு காமம் ஆங்காங்கே – முளைவிட முளைவிட தலைகொத்தித் தின்ற பறவையின் மனோபாவத்திற்கிடையே தெரியும் முகங்களை பெயர் சூட்டிடாததொருக் கவிதையின் வரிகள் படித்துக் கொண்டிருக்க.. உயிர்வரை சுரக்குமந்த உணர்வில் தன் புத்தகத்தில் எழுதிய பெயரிலிருந்து டையிரியில் குறித்ததை தொடர்ந்து நெஞ்சு கிழித்தெழுதிய உன் பெயரின் நினைவாழம் வரை – காதலின் வலி உன்னடையாளமாகவே … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

27) மழை பெய்த ஓரிரவின் விடிகாலையும்; விமான ஜன்னலோரமும்!!

மழை விட்டொழிந்து இலையில் நீர் சொட்டுமொரு காலை.. வானொலியின் சப்தத்தில் மழையிடித்த வீடுகளின் விவரமறியும் தலைப்புச் செய்திக்கானப் பரபரப்பு… சரிந்த கூரைப் பிரித்து மூங்கில் நகற்றி – உள்ளே அகப்பட்டுக் கிடக்கும் ஆடுகளை விடுவித்து தழையொடித்துப் போட்ட ஆடுகளின் பசிநேரம்.. மழை நனைத்த ஆட்டுப்புழுக்கைகளின் மரங்களோடு கலந்த மண்வாசம்.. அதைக் கழுவி விடுகையில் பாட்டி திட்டிக் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்