நீ பார்க்கும் பார்வையிலே..

பல்லவி

நீ பார்க்கும் பார்வையிலே பொழுதொன்று விடிகிறதே
நீ மூடும் கண்களுக்குள் வாழ்க்கை கனமாகிறதே;
உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே
நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே..

சரணம் – 1

காதல் காதல் காதல்தின்றால் உயிர் மென்றுத்
தீர்ப்பாயோ – நீ போகாத தெருவழி எந்தன்
மௌனத்தை மொழியாய்க் கேட்பாயோ

பெண்ணே பெண்ணே ஒருமுறைப் பாரு – உயிர்மொத்தம்
உன்னில் பூப்பேன்; உடலாலே ஓவியந் தீட்டி
உனக்குள்ளே வண்ணங்களாவேன், உயிர் காற்று நீயாய் வீசுதடி
என் மொழியெல்லா-முன் பேரே வேதம் ஆனதடி;

(நீ பார்க்கும் பார்வையிலே)

சரணம் – 2

விளக்கொன்றில் எரியும் சிறகாய் மனசெல்லாம் எரியுதடி
உன் புன்னகையொன்றை மீட்டுக்கொள்ள கடலாய் மனசு ஏங்குதடி
விண்ணின் நீளம் கவலைக் கொண்டு நட்சத்திரமாய் வீழுதடி
ஒரு பார்வைக் கேட்டு கொட்டும்மழையென காதல்காதல் கரையுதடி

மின்னல்பெண்ணே என்னை வெறுக்காதே – என் உலகமிருண்டுப்
போகுமடி, நீ காணும் கனவிலே வாசல்வைத்தேன் – என்
இதயம்நுழைய வேண்டுமடி, நித்தம் எனது நினைவில் நீதான்
உயிர் காற்றாய் கலக்க வேண்டுமடி; இத்தருணம் மட்டும்
என்னில் பூத்தால் வாழ்வே வெளிச்ச(ம்) மாகுமடி..

(நீ பார்க்கும் பார்வையிலே)

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பாடல்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to நீ பார்க்கும் பார்வையிலே..

 1. Umah thevi சொல்கிறார்:

  //உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே
  நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே..//

  //உடலாலே ஓவியந் தீட்டி
  உனக்குள்ளே வண்ணங்களாவேன், உயிர் காற்று நீயாய் வீசுதடி
  என் மொழியெல்லா-முன் பேரே வேதம் ஆனதடி;//

  அருமை அருமை மிக அருமை!! உங்களின் உயிர் வரிகள்,அற்புதமான இசையும், குரலும் பாடலை பல முறை கேட்க செய்கிறது.
  வாழ்த்துக்கள்!!

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   நன்றி உமா.. நான் ஆழ்ந்து எழுதிய கவிதையிது. கவிதைக்கான பாடுபொருள் கவிதையின் தேடுதலிலும் மொழியின் வலிமையிலுமேயிருந்தேக் கிடைப்பதாக எண்ணிக் கடக்கிறேன்..

   Like

 2. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  “..நீ போகாத தெருவழி எந்தன்
  மௌனத்தை மொழியாய்க் கேட்பாயோ..”
  அருமையான வரிகள்.

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   நன்றி ஐயா. காதல் உயிரில் பசையாக அல்ல; உயிராகவே உள்நிறைந்துப் போன பிறப்பொன்றின் உள்ளேக் கிடந்த வலியிது; வரிகளில் இப்படி சிலநேரம் எட்டிப் பார்த்து விடுகிறது..

   Like

 3. ranimohan சொல்கிறார்:

  காதல் இங்கே கனக்கிறதே
  உன் கவிதை வரிகள் ஜொலிக்கிறதே
  பாட்டு கேட்டு பரவசமானது
  இதை பதிவு செய்ய வெகு நாளானது.

  //நீ பேசாத தருணம் மட்டும்
  உயிர்செத்து செத்து உடல் வேகிறதே..//

  மிக அருமையாகச் சொன்னீர்கள். ஆம், மூச்சு நின்றால் மட்டும் மரணமென்றில்லை, காதலியின்; பேச்சு நின்றால் கூட அதுவுமொரு மரணத்திற்குச் சமம்தான்..

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   //மூச்சு நின்றால் மட்டும் மரணமென்றில்லை
   காதலியின்;
   பேச்சு நின்றால் கூட
   அதுவுமொரு மரணத்திற்குச் சமம்தான்..// அழுத்தமான வரிகள். உணர்வுகளை அப்பட்டமாய் வெளிக்காட்டும் வெள்ளைத்தன வரிகள். தங்களின் பாராட்டிற்கு நன்றி. எல்லாம் புகழும் தம்பி ஜெயந்தனுக்கே..

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s