Monthly Archives: ஜனவரி 2014

புதிய கொடியில் கிழியும் மனது..

1 டாஸ்மாக் புகையிலை பான் குட்கா வெண்சுருட்டு நீதியற்ற கொலை நிற்காத கொள்ளை தீராத லஞ்சமென இத்தனைக்கு மத்தியில் ஏற்றப்படும் கொடி வீழ்ச்சியின் சாட்சி!! —————————————————————— 2 ஜாதிவெறி மதச் சண்டை நாத்திகம் ஆத்திகம் மேலோர் கீழோர் சுயநல அரசியல் இணக்கமின்மை ….. இல்லை இல்லை .. இன்னுமிங்கே நான் மிருகங்களுக்கு அடிமை தான்.. —————————————————————— … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கொஞ்சம் நில்லுங்கள்; கொடி பறக்கட்டும்..

வீடு வாசல் விடுதலை எல்லாம் வேறு, ரத்தவாடை மறக்கும் மனதுள் சற்று தேசக்காற்று நிறையட்டுமே; குண்டுபட்ட மார்புகளில் வழிந்த ரத்தத்தின் ஒரு துளி உன்னோடோ என்னோடோ நிற்குமெனில் நம் மதிப்பை எண்ணிச் சிரிக்கட்டுமே; ஏற்றும் கொடியின் வண்ணத்தில் எம் விடுதலையின் ஏக்கம் தெரியவொரு சாத்தியநெருப்பு மூளட்டுமே; சலசலக்கும் உணர்வுக்குள் நரம்பு வெடிக்கும் ரணம் புகாத பேத … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஆசைன்னா ஆசை; அப்படியொரு ஆசை..

ஆசை நிரந்தரமானவை அழிவதில்லை; வாழ்வின் மேடு பள்ளங்களில் ஏறியிறங்கியும் அதற்கான இடத்தை அதுவாகவே தேடிக்கொண்டுமிருக்கிறது ஆசை; சிகரெட் சுடும் உதட்டிலும் மது குடிக்கும் போதையிலும் மலிவாக மணக்கும் வியர்வையிலும் அற்பமாக நிலைக்கிறது ஆசை; கடன்வட்டி கனத்தில் ஏதோ நடந்திராத ஏக்கத்தின் வலியில் திறந்தக் கதவின் திருட்டில் மூடியக் கதவின் இருட்டுள் முள்போல குத்துகிறது ஆசை; பெண்ணின் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்!!

ஒவ்வொரு விறகாய் சுள்ளி பொருக்கி ஓராயிரம் கனவை சமைத்து ஓயாக்  கண்ணீரிலும் உள்ளம் சிரிக்கும் பொங்கல்; ஒரு துண்டு கரும்பு நறுக்கி  – வீடெங்கும் எறும்பூர ஒரு பானை வெண்சோற்றில் வீடெல்லாம் இனிக்கும் பொங்கல்! உழுத நிலம் பெருமை கொள்ள உழைத்த மாடு மஞ்சள்  பூட்டி ஊரெல்லாமெம் வீரத்தை ஆண்டாண்டாய் விதைத்தப் பொங்கல்; மீண்டும் மீண்டும் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 15)

காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்; வாழ்க!! கையச்சு முறுக்குப் போல உடைகிறது மனசு. நகக்கீறல்களைப் போல மறையாமல் ஒட்டிக்கொண்ட தழும்புகளாக மனதுள் ஒட்டிக்கொள்கிறது வார்த்தைகள். வாழ்வின் மூச்சு நிற்கும்வரை மறக்காமல் வலிக்கிறது நமது ஒவ்வொரு சூடானச் சொல்லும். நாளையைப் பற்றி எந்த அக்கரையுமே கோபத்திற்குக் கிடையாது என்றால் யாரைப் பற்றிய எந்த நினைப்பும் கோபத்தில் பேசும் பேச்சுக்கும் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்