35, நினைத்தாலே இனிப்பவள் நீ..

31

னக்குத் தெரியுமா
எனக்கு
இப்போதெல்லாம்
போதை நிறைய ஏறிக் கிடக்கிறது

வெறும்
நீயெனும் போதை..
————————————————————————

2

னக்குத் தூக்கத்தில்
வரும் கனவும்
எனக்கு வரும் கனவும்
ஒன்று தான்;

நீ எனக்குச் சொல்லாததும்
நானுனக்குச் சொல்லாததும் அது..
————————————————————————

3

கைக்குட்டையை கொடுத்து
மடித்து வைத்துக் கொள்
என்றாய்..

எனக்குத் தெரியும்
நீ எதையோ கொடுக்கிறாய்
எதையோ என்னுள் புதைக்கிறாய்

அதை நான்
பத்திரமாக வைத்திருப்பேன்

ஒரு முறை மறுமுறை என்று
சிமிட்டிக் கொள்ளும் இமைகளுள்
நீ கொடுத்த கைக்குட்டையும்
அதோடு மடிந்துக் கிடக்கும் நீயும்

மிக பத்திரமாகயிருக்கும்..
————————————————————————

4

ல்லோரிடமும்
போய் வருகிறேன்
போய் வருகிறேன்
என்றேன்
உன்னிடமும் சொன்னேன்

நீ போ என்கிறாய்
கண்கள் போகாதே என்கிறது,
நானும் போகிறேன் என்கிறேன்
மனசு உன்னோடே நிற்கிறது..

வேறென்ன செய்ய
ஒரு கணத்தில் எப்படியோ
அங்கிருந்து வந்துவிடுகிறேன்
உன்னிடமிருந்து மனசு வந்ததேயில்லை..
————————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 35, நினைத்தாலே இனிப்பவள் நீ..

  1. வணக்கம்
    அண்ணா

    காதல் அமுதம் ததும்பும் வரிகள் படிக்க படிக்க படிக்கவே சொல்லுது..பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Like

  2. yarlpavanan's avatar yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    Liked by 1 person

yarlpavanan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி