வந்துப் போ நேத்ரா.. வந்து ஓடிவிடு..

canvas-art-prints-fabric-wall-decor-giclee-oil-painting-augustus-leopold-egg-the-font-b-death

 

ங்கிருக்கிறாய் அம்மா
ஒரு விளக்கு அணையை இருக்கிறது வா..
வாழ்க்கைத்திரி எரிந்து எரிந்து
மரணத்து எண்ணெய்க்குள்
நனைந்துக் கிடக்கிறதே அம்மா..
நீ எங்கிருக்கிறாய்?
உன்னால்தான் ஒரு கை சுடுகையிலும்
இன்னொருக் கையினால்
அந்த விளக்கணையாது பார்த்துக்கொள்ள இயலும்..
வா அம்மா..
எங்கிருக்கிறாய் நீ..?
எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மரத்திலிருந்து உதிரும் இலைபோல
நேற்றொருவர் இன்றொருவர் என்றெல்லாம்
யாராரோ இறந்த கணக்கைச் சொல்கிறார்கள்..
எனக்கும் வாழும் தெருவில்
மரணத் தீ எரிகிறது..
கொஞ்ச கொஞ்சமாய் நம்பிக்கை நீரூற்றி ஊற்றி
அணைக்கிறேன்..
என் சாவிற்கென கொய்த மலர்களை வாரி
மரணத்தின் பாதத்தில் இறைக்கிறேன்..
போ.. போ..
மரணமே போ.. அம்மா வருவாள் ஓடிவிடு..
விரட்டிவிடுகிறேன்..
ஆனால் வலிக்கிறதே அம்மா
இரவு எதிரிபோல எனைக் கொல்கிறது
பகல் இரவாகிக் கொண்டுள்ளது
உயிரோடு மட்டுமிருக்கிறேன் என்பது வலியில்லையா?
எங்கே எனது வாழ்க்கை ?
எங்கே நான் ?
நான் புனிதமானவன் அம்மா
பலம் மிக்கவன்
எனக்கு நான் வேண்டும்..
என்னை மீண்டுமொரு முறை தா
வா ஓடிவந்து அணையை இருக்கும் விளக்கைப்
பிடித்துக்கொள்…
விட்டில்பூச்சிகள் இறவாத வெளிச்சத்தில்
நானும் இனி உயிர்த்திருக்கிறேன்..
——————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to வந்துப் போ நேத்ரா.. வந்து ஓடிவிடு..

  1. பட்டுக்கோட்டை ராஜப்பா சொல்கிறார்:

    விட்டதில் பூச்சி இரவாத வெளிச்சத்தில் இறவாமல் விழித்திருப்பேன் இதுவரை கேட்டறியாத கற்பனை அற்புதம் கவிஞரே

    Liked by 1 person

  2. வித்யாசாகர் சொல்கிறார்:

    நன்றி பேச்சுக் கடலே..

    Like

பின்னூட்டமொன்றை இடுக