குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள்!!

கடைத் தெருவோரம் சில கண்ணீர் துளிகள்

ரு வாகன நெரிசல் உள்ள பகுதி – அங்கே பக்கத்து வீட்டுக் காரரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண்மணி?’

அந்நேரம் பார்த்து – அங்கு வந்த அவளின் குழந்தை ‘தாய் மடியை முட்டி..முட்டி.. பால் குடிக்கும் கன்றினைப் போல் புடவைத் தலைப்பை – இழுத்து – சுழற்றி கெஞ்சி அழுது – ஒரு இருபதைந்து பைசா நாணயத்தை வாங்கிக் கொண்டு – தெரு மூளையிலிருக்கும் பெட்டிக் கடைக்கு ஓடுகிறது.

கடையில் – தேன் மிட்டாய் பார்த்தவுடன் அந்த குழந்தைக்கு நாக்கில் இனித்தது. கடலை உருண்டை கண்டவுடன் – வாயில் எச்சில் ஊறியது. அச்சுமுறுக்கு டப்பாவோ..’என்னை எடு…. என்னை எடு என்றது. அதுமட்டுமா-

அருகில் கைவிரல் அப்பளம், கமர்கட்டு மிட்டாய், தேங்காய் பார்பி – இவைகளுக்கு மத்தியில் பலூன் போன்ற இதர விளையாட்டுப் பொருட்களும் இருக்க – அந்த குழந்தையின் கையிலிருந்ததோ வெறும் இருபந்தைந்து பைசா நாணயம்!

சுற்றிமுற்றி எல்லாவற்றையும் பார்த்துவிட்டு விலையையும் கேட்டுவிட்டு – இருபந்தைந்து பைசாவிற்கு என்னென்ன எத்தனை கிடைக்குமென்று அறிந்துக் கொண்டு, கடைசியாய் ஒரு சிகப்புநிற – தேன்மிட்டாயை வாங்கியது.

அதையும் உடனே தின்றுவிட்டதா என்றால், அதுவும் இல்லை. வாங்கிக் கொண்டு வெளியே வந்தது தெருவோரம் நின்று கொண்டு – அந்த தேன்மிட்டாயை எடுத்துப் பார்த்து.

‘தின்று விடலாமா..(?)’ வேண்டாம்..வேண்டாம்…’ ஒரு நொடி யோசித்துப் பார்த்துவிட்டு எடுத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டது. தெருவின் இரண்டு புறமும் வாகனங்கள் வந்துக் கொண்டுருக்க ஒரு அசட்டுத் தனமாக ஓடி… தெருவின் அடுத்த முனையில் நின்றது.

மீண்டும் மிட்டாயை எடுத்து ‘ஒரு சின்ன கடி – கடிக்கப் போக’ கீழே தன் காலுக்கருகில் சற்று தள்ளி ஒரு ஐம்பது பைசா நாணயமொன்று இருக்க, அதை எடுத்துக் கொண்டு – ஆர்வமாக ஓடி இரண்டு கைவிரல் அப்பளமும், இன்னுமிரண்டு கடலை – உருண்டையும் வாங்கிக் கொண்டு——— தெருவினைக் ————— கடக்கையில் சடாரென திரும்பிய லாரி ஒன்று; தூக்கி வீசியது அந்த குழந்தையை!

ஐயோவென்று எல்லோரும் ஓடி வருகிறார்கள். கூட்டம் கூடுகிறது. யாராலுமே காப்பாற்ற முடியாமல் பாவமாக அந்தக் குழந்தை சிதறிக் கிடக்க; அருகே அந்த தேன்மிட்டாயும், கடலை உருண்டையும், கைவிரல் அப்பளமும் துளிகூட நசுங்காமல், சிதறி நின்று கண்ணீர் வடித்தது!

அந்த கொடூர காட்சியை காணும்; கேட்கும்; குழந்தைகள் நலனில் கூடுதல் அக்கறை எடுத்திடாத பெற்றோர்களின் கண்களில் ரத்தமே வந்து கூட என்ன பயன்? அந்த குழந்தை ஆசைப் பட்ட தேன்மிட்டாயையும் கைவிரல் அப்பளத்தையும் அது தின்னவேயில்லையே!!
——————————————————————————————–
வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

82 இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!!

கோபத்தின்
உச்சத்தில்
வாழ்வின் அவலங்களே
கைகொட்டிச் சிரிக்கின்றன;

நரநரவென்று மென்ற
பற்களின் நசுக்களில்
இரத்த உறவுகளே
சிக்கித் தவிக்கின்றன;

உணர்ச்சிப் பொருக்கா
நரம்புப் புடைப்பில்
உறங்கா இரவுகளே கோபத்தின்
சாபங்களாகின்றன;

கோபம் ஒரு ஆயுதமென்று
ஏந்தப்பட்ட கைகளில் – கூட
வாளாய் வீசி அறுக்கப் பட்ட இதயங்கள் தான்
கொட்டிக் கிடக்கின்றன;

இளமை தொலைந்தும்
முதுமை கடந்தும்
மரணத்தின் உச்சம்வரை
கோபத்தின் கறை அகலாமலே உயிர்களும் பிரிகின்றன;

நட்பு மறந்து, நன்றி துறந்து
கோபத்தால் துச்சப் படுத்தப்பட்ட உறவுகளை
மீண்டும் சிரித்துக் கொள்ளும் ஓர் நாளில்
கோபம்; முழுமையாய் மீட்டுத் தருவதேயில்லை;

கைகொட்டி சிரித்த
நான்கு பேர் சிரிப்பிற்கு,
காலம் முழுதிற்காய் வீழும்
ஒற்றை பழிச்சொல்லிற்கு,
நிறைய வீடுகளின் காரணம் –
வீண்கோபமெனும் ஒற்றை இழுக்கே;

இதயங்கள் அறுபடாத
கோபமும்,
உணர்ச்சிப் பெருக்கலில்
புரிதலும்,
நன்மை பிறப்பிக்கும்
நோக்கு-ம் கொண்டு –
தனக்குள் தானென்னும் செருக்கும் விடுப்பின்
அதையும் கடந்து வரும் – – – கோபமே
சமூகத்தின்; மீப்பெறு ஆயுதமென்று கொள்க!!
——————————————————————–
வித்யாசாகர்

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

81 அரைகுடத்தின் நீரலைகள்..

1
வ்வொரு சொட்டு
வியர்வை துளியும் உள்ளே
ஒரு வெற்றியை யேனும்
வைத்துக் கொண்டே சொட்டுகிறது!!!
———————————————————-

2
வீ
ட்டின் நான்கு சுவர்களுக்கு மத்தியில்
நிறைய பொருட்கள் இருக்கின்றன..

எல்லாம் இருந்தும்
அம்மா இல்லாத வீடு –

ஒன்றுமே இல்லாதது போல்
கண்ணீரின்றி மூழ்குகிறது;

அம்மாவை ஊருக்கு கொண்டு சென்ற விமானம்
என்று கொண்டு வருமோ மீண்டும் – அந்த

நேரில் காணும் அம்மாவின் சிரிப்பை!!
———————————————————-

3
கு
ளிரில் உடல் சற்று நடுங்க
ஒரு குவலையில் சூடாக நீர் தருகிறார் மனைவி.

வாங்கி மேஜையில் வைத்துவிட்டு
எழுத்துக்களில் தொலைந்து போனதில்
நீரும் குளிர்ந்து போனது.

நினைவு வந்தவனாய் –
எடுத்துக் குடிக்கிறேன் தண்ணீரின் குளுமை
உடம்பெல்லாம் பரவியது..

நாவில் குளிர்ந்து நனையும்
இதே தண்ணீர் தான் –
சற்று முன்பு கொதிக்க கொதிக்க
அடுப்பிலிருந்து இறக்கிக் கொடுக்கப் பட்டது.

வாழ்க்கையின் நிறைய விசயங்களும்
இப்படித் தான் –
காலத்தின் நகர்தலில் மாறிப் போகின்றன..

எல்லாம் கடந்துவிடுகிறது!!
———————————————————-

4
வெ
றுமனே கிடக்கிறது
நிறைய இடங்கள்;

எதையேனும் இட்டு வையுங்கள்
இல்லார்க்கு கொடுத்தேனும் செல்லுங்கள்

நீங்கள் கொடுத்த இடத்திலிருந்து
நாளைய தலைமுறை பிறக்கலாம்,

இன்றைய தலைமுறையின்
ஒரு குடும்பமேனும் –
மானத்தோடு வாழலாம்!

இல்லார்க்கு கொடுக்கும் பணமோ பொருளோ
இருப்போரை நட்டமாக்குவதில்லை;
இல்லாரை வாழ்விக்கிறது!!
———————————————————-

5
பி
றர் நலம் கருதலில்
தன் லட்சியம் கூட
மறக்கவோ;
மறுக்கவோ படுகிறது!!
———————————————————-

6
பி
றருக்கு உதவ
வழி இருப்பின்;
உதவாததும் குற்றமே; எனில்

சிலருக்கு
உதவுதலும் குற்றமாகிறது!!
———————————————————-

7
டை நிறைய
பொருட்கள் –
நிறைய விற்கின்றன;

பிடித்ததையெல்லாம் வாங்குவதற்கான
பணம் மட்டும் –
முழுமையாக இருந்ததேயில்லை.

உலகத்தின் நிறைய அமைவுகள்
இப்படித் தான் இருக்கின்றன;
எல்லாம் இருந்தும் இல்லாதவைகளாக!!
———————————————————-

8
வெ
கு நேரமாக
மறைத்து மறைத்துப் பார்த்து
யாரேனும் –
எந்த ஆண்களேனும்
பார்த்துவிடுவார்களோ என்று தயங்கி தயங்கி
யாரும் பார்திராதவண்ணம் அளவு தேடி தேடி
என் மனைவிக்கு உள்ளாடை ஒன்று எடுத்தேன்;

நான்காக அதை மடித்து
கைக்குள் மறைத்துக் கொண்டு
கடையின் அடித்தளத்திலிருந்து
மேல் தளத்திற்கு கொண்டுவந்து பணம் கொடுக்கப் போனேன்;

அந்த பணம் வாங்கும் ஆள்
அதை வெளியே எடுத்துப் பிரித்து
நான்கு புறமும் மேல் தூக்கி சுற்றிப் பார்த்து –
பிறகு ‘ஓ இந்த அளவா; இத்தனை விலை’ என்றார்!

எனக்குக் கூசத் தான் செய்தது
யாரையும் சுற்றி யெல்லாம் பார்க்கவில்லை
புரிதலை உள்ளாடையோடு சேர்த்து
பை’வரை நிறைத்துக் கொண்டு நடந்தேன் –
வளர்ச்சியின் மாற்றம் என்றாலும்; யதார்த்தம் வலித்தது!!
———————————————————-

9
த்தனை துன்பம் வரினும்
இன்பம் வரினும் –
எதையும் வாழ்வின் ஒரு கட்டம் என்றே எண்ணி
வாழ்க்கையை வாழ்” என்றான் அவன்

இன்பம் வருகையில் சரி…
துன்பம் வருகையில் எப்படி???” என்றென் நான்

இன்பம் வருகையில் சிரிப்பை குறைத்துக் கொள்
துன்பம் வருகையில் கண்ணீரும் குறையும் என்றான் அவன்

சரியென்று சொல்லிவிட்டு –
அவ்வப்பொழுது கண்களை துடைத்துக் கொள்கிறேன் நான்!!!!!!!!!!

சிரிப்பு – வெகுதூரத்தில் தெரிந்தது..
———————————————————-

10
வெ
ற்றிக்கான நிறைய இடங்கள்
வெற்றிடங்களாகவே கிடக்கின்றன இன்னும்;

நிரப்பும் வாய்ப்பு நம் கையிலும் இருக்கலாம்
நானாகவும் நீங்களாகவும் கூட இருக்கலாம்” என்றான்
எனக்குள்ளிருக்கும் அவன்;

“ஒவ்வொருவருக்கான வெற்றியும்
அவருக்காக காத்தே இருக்கின்றன –
பிறப்பவர் அத்தனை பெரும் ஒவ்வொன்றில் ஜெயிப்பவரே
என்றேன் நான் –
அப்படி என்றால் நீ என்றான் அவன்;

எனக்கு நீங்களும் நினைவிற்கு வந்தீர்கள்….
———————————————————-
வித்யாசாகர்

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்னன்புத் தம்பிக்குத் திருமண வாழ்த்து…

மணமகன் : சேவியர்                                     மணமகள்: ஜெகா

நாள் : 23. 03. 2011                                              இடம் : கன்னியாகுமரி

டன் பிறந்த மூன்று பேரோடு
நான்காவதாய் சேர்ந்தவனே;
நாளும் பொழுதும் – நெஞ்சில் சுமந்து
பிறப்பின் தூரத்தை நட்பினால் அறுத்தவனே;

ன்பெனும் ஒற்றை வார்த்தைக்கு
உயிரை கடைசிச் சொட்டுவரை கொடுப்பவனே;
உண்மை நிலைக்கு அஞ்சி –
சத்தியம் போற்றும் சீலனே;

காலம் கடக்க கடக்க
அதன் மீதேறி நின்று தங்கைகளுக்காய் உழைத்தவனே,
தாய் சொல் காத்து,  தந்தை வழிநடந்து; ஊர்சொல்லும் மதித்து –
தீஞ்சொல்லுக்கு பயம் கொள்ளும் பண்பிற்குரியோனே;

ழைப்பின் உச்சத்தை ஒரு இசைபோல்
உடனிருப்பவருக்கும் உரைப்பவனே;
உன் பதைபதைக்கும் பேச்சுக்குள்  –
பிறர்நலம் பேணும் உணர்வுகளைக் கொண்டவனே;

ன்னொரு ஏக்கத்திற்கே இறைவன்
என் தோள் வலியச் செய்ததைப் போல்;

உன்னொரு ஏக்கத்திற்கே இறைவன்
என் தோள் வலியச் செய்ததைப் போல்; என் பல
வெற்றிக்கென  – உன்னொரு கையும் கிடைக்க
என் வெற்றிகளுக்கும் காரணமாய்; எண்ணத்தால் இருப்பவனே;

புன்னகையில் பூத்து  நிற்போனே; அன்பினால் எமை
அர்ச்சித்தவனே; அக்கரையில் தாய்போல் சிறந்தவனே;
என்னன்பு தம்பியே…….., எம் உடன்பிறப்பே….

நீ வாழி..
நீடு வாழி..
ன் குலம் சிறக்க வாழி..
ன் பெயர் நிலைக்க  வாழி..
ன் நலமும், வீட்டார் நலமும், உனை சேர்ந்தோர் நலமும்
குன்றாது வளம்பெற வாழி..

ல்லெண்ணங்கள் ஈடேற
ற்செல்வங்கள் பதினாறும் பெற்று
ந்தவள் பூரிப்பில் –

ரும் சந்ததி செழிக்க
பார்போற்ற; ஊர் போற்ற; எல்லாம் சிறக்க
ற்பெயரோடும் பல புகழோடும் நீடூழி வாழி!!

பேரன்புடன்..

அண்ணன்
வித்யாசாகர் மற்றும் குடும்பம்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

43, போனதடி; பொய்யென ஓர் போர்!!

வீசும் மழை போல் வீசி
அடங்கும் மழை போல் அடங்கி
காணுமிடமெல்லாம் கண்ணீர் தெளித்து
உயிர் கொண்டு போனதடி போர்;
எம் உயிர்கொண்டுப் போனதடிப்போர்!!

கொஞ்சும் மழலை கொன்று
நரை எஞ்சும் பலரை தின்று
பெண்கள் மானம்குடித்து கொலைவெறி தரித்து
தமிழனை அடையாளமின்றி அழிக்க வந்ததடிப் போர்;
அங்கே அழித்துவிட்டேப் போனதடிப் போர்!!

துயிலந்தனை இடித்து
போர்வீரர் பலரை அழித்து
எமை ஊர் ஊராய் அலைகழித்து
போர்குற்றம் புரிந்து விட்டதடிப் போர்;
சூழ்ச்சியோடு சில; நரிகள் செய்திட்ட போர்!

கடல்கோல் குடித்த மிச்சத்தை
பின் – மழைவந்தும் மூழ்காத வீரத்தை
தனித்து வெல்லத் திராணியின்றி – யெம் வீரர்களை
கோழைகள் விஷம் வீசக்; கொன்றுப் போட்டதடிப் போர்;
கொன்று; தலைவிரித்தாடியதந்த போர்!!

எம் காலத்தை பின்னால் தள்ளி
எம் சாபத்தை காலத்திற்கும் சுமந்து
ஒரு இனத்தின் உரத்த அழுகை சப்தத்திற்கிடையே
ஆட்டமாடி பாட்டுப்பாடி வெற்றிக் களிப்பு கொண்டதடிப் போர்;
பேரழிவின் – அரக்கத்தனம் பூண்டதடிப் போர்!

நான் போனாலென்ன
என் பேத்தி யாள்வாள்,

நான் போனாலென்ன
என் மகனேனும் ஆள்வான்,

நான் போனாலென்ன
என் உறவுகளாவது ஆளும்,

நாங்கள் மொத்தம் போனாலென்ன
என் – சந்ததியேனும் வாழும் வாழட்டுமே என்று
உயிர்பல தியாகித்த – என்
வீரர்களின் ரத்தம் பீய்ச்சி,

என் தமிழச்சியின் நிர்வாணத்தை
மரணத்தினால் உரித்து,

என் பிள்ளைகளின் கனவுகளை
உடலோடு எரித்து,

எம் அன்னையவள் –
இறந்துயெரித்த சாம்பலை கூட கொச்சைப்படுத்தி,

உரக்கச் சிரிக்கும் கயவர்களோடு
கூத்தாடிப் போனதடிப் போர்;

பொய்யெனச் சென்று
இன்றும் பின்னால் நின்று –
எமை மறைந்து மறைந்து தாக்குதடி போர்!
தீரா வஞ்சகத்தின் –
பொய்யெனப் போன அந்த போர்!!
———————————————————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்