5 சுட்டு எரிந்ததொரு காடு.. (64)

ஆணும் பெண்ணும்
குழந்தையுமென –
கொன்று குவித்தவனுக்கு
பெயர் போர்வீரனும்,
கொள்ளப் பட்டவனுக்குப் பெயர்
தீவிரவாதியுமெனில்,
 
சொன்னவனை இனி
சிங்களனென உரைப்போம்!
———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

4 சுட்டு எரிந்ததொரு காடு.. (63)

தாய்மை பூண்ட
பெண்களின் அடி வயிற்றில்
பற்றி எரியட்டும்;
முள்ளிவாய்க்காலின் இழப்பும்
ஈழக் கனவும் –
காரணம், ஆண்கள் விட்டதை
பெண்களாவது பிடிக்கட்டும்!
 ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுட்டு எரிந்ததொரு காடு.. (62)

காசு காசென்று
அயல் தேசங்களில் அலைந்ததில்
வாழ்க்கையை
வாழாவிட்டாலும்
இன பற்றும்
தேசப் பற்றினையும் கொண்டோம்;
ஈழத்தை மட்டுமே
கைவிட்டோம்!
———————————————

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுட்டு எரிந்ததொரு காடு.. (61)

சுட்டு எரிந்ததொரு
காடு;
யாரும் –
ஈழமென எண்ணி
விடாதீர்கள்;
தமிழன் இனியும் 
தலைகுனிவதாய் இல்லை!
———————————————

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

(7) காதல் என்றொரு விஷம் – வித்யாசாகர்!

என்னவளே..
இதயம்; சுட்டுப் போட்டவளே
எனை தனிமை நெருப்பில் எரித்தவளே
உயிரில்; பிரிவுத் தீயை இட்டவளே
கொல்லாமலே எனை  கொன்றவளே;
 
காதல் காதலென கைபிடித்தழைத்தவளே
இன்று சாதலுக்கும் சாட்சி நிற்பவளே
சட்டென்று விலகிய சிறு இடைவெளிக்குள்
எனை; வாழும் பிணமாக்கி வைத்தவளே;
 
வாழ்வின் திருப்பத்தை உன்னில் வைத்தது 
என்னில் நிகழ்ந்த தவறு;
கால சுமையின் கனவுகளை எல்லாம்
நீயாய் சுமந்தது நானே செய்த தவறு;
 
தெரிந்தே உடைக்கும் இதய தச்சன்
நீயே ஆனாயடி, உன் தெருவெல்லாம்
காதல் ஏக்கத் ‘தீ பரவி’ –  எனக்காய் நீ ஏங்கும் நேரம்
நான் இல்லாமலும் போவேனடி;
 
காற்று வெளி மூச்சு பரவி
இதயம் தொட்டாலடி, உன் கால் கொலுசு
சப்தம் ஒரு சேதி சொன்னாலடி,
நீ பார்க்கும் பார்வையில்  துளியேனும்
என் தேடலை கொண்டாலடி –
சமாதி உடைத்தேனும் உயிர்ப்பேன்
உனக்காய் மீண்டும் பிறப்பேன் –
காதலால் காதலால் –
உன்னில் நானாய் நிறைவேனடி!!
——————————————————————
வித்யாசாகர்

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்