(7) காதல் என்றொரு விஷம் – வித்யாசாகர்!

ன்னவளே..
இதயம்; சுட்டுப் போட்டவளே
எனை தனிமை நெருப்பில் எரித்தவளே
உயிரில்; பிரிவுத் தீயை இட்டவளே
கொல்லாமலே எனை  கொன்றவளே;
 
காதல் காதலென கைபிடித்தழைத்தவளே
இன்று சாதலுக்கும் சாட்சி நிற்பவளே
சட்டென்று விலகிய சிறு இடைவெளிக்குள்
எனை; வாழும் பிணமாக்கி வைத்தவளே;
 
வாழ்வின் திருப்பத்தை உன்னில் வைத்தது 
என்னில் நிகழ்ந்த தவறு;
கால சுமையின் கனவுகளை எல்லாம்
நீயாய் சுமந்தது நானே செய்த தவறு;
 
தெரிந்தே உடைக்கும் இதய தச்சன்
நீயே ஆனாயடி, உன் தெருவெல்லாம்
காதல் ஏக்கத் ‘தீ பரவி’ –  எனக்காய் நீ ஏங்கும் நேரம்
நான் இல்லாமலும் போவேனடி;
 
காற்று வெளி மூச்சு பரவி
இதயம் தொட்டாலடி, உன் கால் கொலுசு
சப்தம் ஒரு சேதி சொன்னாலடி,
நீ பார்க்கும் பார்வையில்  துளியேனும்
என் தேடலை கொண்டாலடி –
சமாதி உடைத்தேனும் உயிர்ப்பேன்
உனக்காய் மீண்டும் பிறப்பேன் –
காதலால் காதலால் –
உன்னில் நானாய் நிறைவேனடி!!
——————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to (7) காதல் என்றொரு விஷம் – வித்யாசாகர்!

  1. uumm சொல்கிறார்:

    http://vidhyasaagar.com/2010/06/20/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/

    அதென்ன..வித்யாசாகர் ஒருவனுக்கு..ஒருத்தி, குடும்ப வளையம், அப்புறம் நல்லவர்களாக காட்டிக்கொள்ளுதல்..என்பதெல்லம்? இவற்றிற்காகத் தானா வாழ்க்கை? மனிதர்களை மனங்களாய் பார்ப்பது எப்போது..?

    இங்கு மனதால் வாழ்பவர்களை விட மனதுள் வாழ்பவர்களே அதிகம். தனக்கு பிடிக்காத வாழ்வை சகித்துக்கொள்ளகூட எதாவது மறு வழயில் அன்பும் அமைதியும் தேவைப்படுகிறது. எவரொருவருக்கு அவை எதன் வடிவில் கிடைத்தாலும் அவரை பொருத்தவரை அது உயர்வானதும் புனிதமானதும் தான். குற்றம் சொல்லும் மனிதர்களுக்குள்ளும் நேசம் தேடும் நெஞ்சம் உண்டு வித்யாசாகர்.

    வாழ்த்துக்கள்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      //இங்கு மனதால் வாழ்பவர்களை விட; மனதுள் வாழ்பவர்களே அதிகம். தனக்கு பிடிக்காத வாழ்வை சகித்துக்கொள்ள கூட எதாவது மறு வழயில் அன்பும் அமைதியும் தேவைப்படுகிறது. எவரொருவருக்கு அவை எதன் வடிவில் கிடைத்தாலும் அவரை பொருத்தவரை அது உயர்வானதும் புனிதமானதுமும் தான். குற்றம் சொல்லும் மனிதர்களுக்குள்ளும் நேசம் தேடும் நெஞ்சம் உண்டு வித்யாசாகர்.//

      ஆம் உமா; இக்கருத்தை பதிவு செய்வதே அக்கவிதையின் நோக்கமானது. எனினும் போதிய தீர்வு காணாதவர்களாகத் தான் எதனுள்ளோ தொலைந்து போகிறோம் உமா. இப்படி சரி என நாம் உணர்கிறோம், அப்படி சமூகத்தில் மனசு மனசாக வாழ்கிறதா என்றால் கேள்விக்குறியே மிச்சமாகிறது என்பதை; இவ்விடம் வலியுறுத்த எண்ணினேன். அதற்கே சற்று காலத்தின் தீர்ப்பிற்கிடையே உங்களின் சிந்தனையும் வலிமை படுத்த தேவை பட்டது. மிக்க நன்றி உமா..

      Like

பின்னூட்டமொன்றை இடுக