என் பொண்டாட்டி நல்லவ – 8 (சிறுகதை)

Posted in சிறுகதை | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓட்டை குடிசை (சிறுகதை)

ரு சந்துமுனை திரும்புகையில் தெரிகிறதந்த புத்தக கடை.

ஓடிச்சென்று ஒரு புத்தகம் எடுத்து வேகவேகமாய் புரட்டுகிறேன். ‘ஒரு குருடனிடம் சென்று அதோ உனக்கான இரு கண்ளும் அங்கே கிடக்கிறது; செல் எடுத்துக் கொள் என்று சொன்னால்’ அவன் எப்படி தேடி துழாவுவானோ அப்படி தேடுகிறேன் நானும் என் படைப்புகள் ஏதேனும் வந்திருக்குமா என அத்தனை வார இதழ்களிலும்.. 

“தம்பி புத்தகத்தை பிரிக்காதேப்பா”

“கொஞ்சம் மட்டும் பார்த்துக்கறண்ணே”

“இங்க என்ன நூலகமா நடத்தறோம். கடைதானே? போ.. போ..” வெடுக்கென பிடிங்கிக் கொண்டார் புத்தகத்தை; என் மனசு புரியாத கடைகாரர்.

அவர் புத்தகத்தை பிடுங்கிக் கொண்டு விரட்டிய விரட்டில் மனம் வலிக்கத் தான் செய்தது. ஆனாலும் நம்பிக்கையிருந்தது நிச்சயம் இந்த வாரம் என் கதை வந்திருக்குமென்று.

நம்பிக்கை ஆழமாக வேரூன்ற, வேறெங்கேனும் சென்றேனும் பார்த்துவிடுவோமென எண்ணுவதற்குள், அருகில் இரண்டு பேர் புத்தகம் வைத்துக் கொண்டு நின்றிருக்க, அவர்களிடம் சென்று –

“ஐயா ஐயா.. இது ஆனந்த விகடன் தானே ஒரு நிமிஷம் தறிங்களா”

“படிக்கறவன் பணம் கொடுத்து வாங்கிப் படி” அந்த இரண்டு பேரில் ஒருவர்

“பணமில்லீங்க. குடுத்தீங்கன்னா ஒரு சுத்து மட்டும் பார்த்துட்டு கொடுத்துருவேங்க”

“ஒரு சுத்து பார்த்து என்னத்த கிழிக்கப் போற. போவியா”

“நான் ஒரு கதை எழுதி அனுப்பியிருக்கேன் ஐயா. இந்த வாரம் கண்டிப்பா அது வந்திருக்கும்.”

“அப்படியா, உம் பேரென்ன”

“வித்யா’ ன்னு பாருங்களேன்..”

“அதென்ன பாருங்களேன்?? அப்போ நீ எழுதலையா??”

“இல்லைங்கையா, நான் தான் எழுதினேன், வித்யா என் தங்கையோட பேரு” என்றென்

அவர் அப்படியா’ என ஒரு இழுப்பு இழுத்துவிட்டு கையிலிருந்த வார இதழை நான்கு புறமும் புறட்டி சற்று படித்து ஓய்ந்து என்னை இரண்டுமுறை ஏற இறங்க பார்த்து விட்டு, “அதலாம் ஒண்ணும் வரலை யே..” மிகச் சாதாரணமாகச் சொன்னார் அவர்.

எனக்குத் தான் ஏமாற்றம் நெஞ்சை பிளந்தது. இது ஒன்றும் புதிதல்ல என்றாலும், இதை கூட பிரசுரிக்காத வேறென்ன எதிர்பார்ப்பு மிஞ்சிவிடும் இந்த வார இதழ் நடத்துபவர்களுக்கு என ஒரு மூர்கத் தனமாக கோபமெனை மென்றது. ஏதோ ஒரு மனதை அழுத்திய ஏமாற்றம் ‘நான் நடந்துச் செல்லும் தெருவின் நீளமாக என் நெஞ்சைப் அறுக்க, அவர்கள் இருவரும் ஏதோ பேசி சிரிக்கிறார்கள்.

“ஏன்டா சிரிச்ச?” அந்த இரண்டு பேரில் மற்றொருவன் கேட்டான்

“இப்போ இதுல ஒரு கதை படிச்சேன் நல்லாருக்குன்னு சொன்னியே”

“ஆமா ”ட்டை குடிசை

”அது அவன் எழுதியது தான்”

——————————————————————————————————-

வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நெஞ்சில்; பச்சை குத்திய கதை!!

_வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

படைப்பாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு..

படைப்பாளிகளுக்கு வணக்கம்,
 
ரு மகிழ்வான செய்தியுடன் உங்களை அணுகுவதில் மன நிறைவு கொள்கிறேன். புதிதாகத் துவங்க உள்ள “வலைமொழி இதழ்” விரைவில் வெளிவர உள்ளது. இரவு தூக்கத்தை தொலைத்தும், தமிழின் பால் ஆர்வம் கொண்டும், இச்சமூகத்திற்கு எதையேனும் செய்யத் துணிந்த ஆற்றாமையை; சமூக சீர்கேடுகளால் கொந்தளித்தெழுந்த உணர்வுகளை வலையில் எழுதியும் வரும் படைப்பாளிகளின் சீரிய படைப்புக்களை சேகரித்து ஒரு தரமான இதழாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு அறிய முயற்சியை தோழர் இஷாக் முன்னெடுத்து தமிழ் அலை பதிப்பகம் வழியாக வெளியிட கலந்தாய்ந்துள்ளார். அதற்கான படைப்புகளை தோழமை உறவுகளிடமிருந்து வெகுவாய் எதிர்ப்பார்த்தும் உதவ முன்வருவோரின் கரம் கொண்டு எழவுமே இம்மடல் அனுப்பப் படுகிறது.
 
புத்தக விமர்சனங்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் போன்ற பண்முகத் தன்மையான படைப்புகள் வரவேர்க்கப் படுகின்றன. புனைப் பெயரில் எழுதுபவராயின், படைப்புகளை அனுப்புபவரின் முழு விவரத்தையும் சேர்த்தனுப்புவது அவசியமெனக் கருதுகிறோம். படைப்புகளை valaimozhi1@gmail.com , editor@vidhyasaagar.com போன்ற முகவரிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். படைப்புகள் தேர்வுக் குழுவின் தேர்விற்கு உட்பட்டதென்பதையும், தெரிவித்து இம் மாபெரும் முயற்சிக்கு துணை நிற்க வேண்டி, மிக நன்றிகளுடன் விடைகொள்கிறேன்.
 
வித்யாசாகர்
குவைத்
Posted in அறிவிப்பு | Tagged , , , , , | 12 பின்னூட்டங்கள்

ஈழத்திற்காக – ஓர் விண்ணப்பக் கடிதம்!!

அன்பு உறவுகளுக்கு வணக்கம்,
 
மனிதம் வேண்டி மன்றாட ஓர் விண்ணப்பக் கடிதத்தின் அனுப்புதலுக்கான இணைப்பு கீழே உள்ளது, அதிக நிமிடம் கூட அல்ல சில நொடிகளே எடுக்கும் இந்த இணைப்பை சற்று சொடுக்கிப் பாருங்களேன். நம் இன மக்களின் நல்வாழ்விற்காய் நம்மாலும் ஏதேனும் செய்ய இயலுமெனில், முயல்வோமே..
 
http://www.srilankacampaign.org/form.htm
 
பெருத்த கைகூப்புடனான நன்றிகளுடன்..
 
வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக