பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 1

உன்னிடம் பேசுகையில்

ஆயிரம்
பட்டாம் பூச்சிகள்
பறக்கின்றன;
ஒன்றை கூட
பிடிக்க
முடியவில்லை,

எல்லாம் –
மனதிற்குள் மட்டும்!
————————–
வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | 2 பின்னூட்டங்கள்

மேகப் பூக்களின் விளம்பரப் பலகை – வானவில்

ஏழு வண்ணத்தில் எண்ணிக் கோர்த்து
ஏழைகள் பார்வை உடுத்தும் – பட்டாடை;
வானவில்!

வளைந்த புருவத்தில் பூமிக் காதலிக்கு
வானம் காட்டும் வர்ண ஜாலம்;
வானவில்!

கல்வியறிவை கடன் வாங்காது
இயற்கை நெய்த கணினி வித்தை;
வானவில்!

ஏற்றத் தாழ்வுகளின் ஏணி மிதித்து
உலகின் பார்வைக்காய் பூட்டிவைத்த
வான தேவதையின் வண்ண மாலை;
வானவில்!

காற்றில் மழையில்
கரைந்திடாத கலைந்திடாத
மேகப் பூக்களின் விளம்பரப் பலகை;
வானவில்!

இயற்கையின் இயக்கத்திற்கு முகவரி கொடுத்த –
கடவுளின் பெயரெழுதிடாத மவுனத்தின்
வானம் தீட்டிய வண்ண மொழியாக்கம்;
வானவில்!

பூமிக்கு வரும் மழை விருந்தாளிக்கு
தன் மேக கழுத்தில் –
வானம் கட்டிய ஆபரணம்;
வானவில்!

திக்கிரண்டுமாய் நீண்டு வளைந்த
தென்றல் பெண்ணின் ஆடை அலங்காரம்;
வானவில்!

வானவில்லுக்காய்;
வார மாத தவம் போல் காத்திருந்து –
வெளிவராத மங்கை;
வானவில்!

என்றேனும் எட்டி வானம் பார்கையில்
அதிசயம் பூத்து போன – பூஞ்சரமாய்
சுட்டிக் காட்டும் விரல்நுனியில் – உதடு சுழித்து
முத்தமிட்ட வண்ணப் பெண்ணவள் வானவில்! வானவில்!
————————————————————
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

எப்பொழுதேனும் கிடைத்துவிடும்; அது!

பேருந்தின் ஜன்னலோர இருக்கை
ஒரு கனவாகவே என் காலம்;

முதன் முறை அமரும் போது
அப்பா பாதுகாப்புக் கருதி நடுவே அமரவைத்தார்;

சற்று வளர்ந்துவிட்ட போது
தம்பி கேட்பான் விட்டுவிடுவேன்

இன்னும் சற்று வளர்ந்ததும்
நண்பன் ‘எனக்குடா’ என்பான் விட்டுவிடுவேன்

பிறகு காதலி வந்தாள்
காதலியும் ஜன்னலோர இருக்கையும் கனவானது

மனைவி வந்தாள்
என்னால் மறுக்கவே முடிந்ததில்லை

இன்றும் அப்படி தான்
மனைவி மகள் நான் – மூவரும் பேருந்தில் ஏறினோம்
மகள் ஓடி சென்று ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து
வானம் பார்த்தாள்,
மனைவி நடுவில் அமர்ந்துக் கொண்டாள்,
நான் கடைசியில் அமர்ந்து – மகளை பார்கிறேன்
எனக்கு முன்பின் இருக்கையின் ஜன்னலோரம்
வெறுமனே இருந்தது!
————————————————–
வித்யாசாகர்

Posted in கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

தொலைபேசி

நிறைய இதயங்கள்
இங்கு தான் உறைகின்றன;
உலகின் தூரங்களை ஒரு
சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது
தொலைபேசி!

காதல் பேசியும்
அரசியல் தகவலறிவித்தும்
குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின்
ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது
தொலைபேசி!

கால வேகத்திற்கு
கையில் அடங்கி போயி;
உலக விஸ்த்தாரிப்பை
ஒரு சொடுக்கலில் அறிவித்து;
மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும்
அலைபேசியென அர்த்தம் கொண்டுவிட்டதில் –
தொலைபேசிக்கே பெருமை!
————————————————
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

உலகமெலாம் நீட்டி முழங்கும் தமிழிக்கு

உலகமெலாம் நீட்டி முழங்கும்
தமிழிக்கு – நம் கவிதை சிறகு முடிந்து
பாச்சரத்தில் – சாமரம் வீசுவோம்
வாருங்கள் தோழர்களே..

இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக