பிரிவுக்குப் பின் – 3

நெடுந்தூர
பயணத்திற்குப்
பின்னும் –

உன்னைவிட்டு நான்
பிரியவேயில்லை;

சிரிக்கிறார்கள் சிலர்
நான் –
சொல்வதை கேட்டு!
———————-
பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் -2

வாழ்வின்
அத்தனைத்
துயரத்திற்கு
மத்தியிலும்;

எப்படி இனிக்கிறதோ
உன் முத்தம்!
———————-
பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 52

வார்த்தைகளால்
உடைந்து போகிறது இதயம்
ஒட்டவைக்க –
வார்த்தைகளால் முடிவதில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 51

உடலெரிக்கும்
நெருப்பிற்கு
உள்ளமே –
விறகாகிறது!

Posted in எத்தனையோ பொய்கள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 50

யாரையும் யாரும்
சுமப்பதில்லை –
சுமப்பதாகவே உணர்கிறது
மனசு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக