ஹைக்கூ – 43

உன்னிடம் கேட்காமல் தான்
பார்வையிலுன் இதயம் தொட்டேன்
நான் தோட்ட –
உன் இதயமெலாம்
இனி காதலாய் பூக்காதா!!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 42

நீ என்னிடம் பேச துடிக்கும்
உன் மனசை
உன் பார்வையால் –
மறைக்க முடிய வில்லை தான்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 41

நீ சற்று தள்ளி நின்று
விடை பெறுவதாக சொன்னாய்
இதயம் உனக்கு முன்னே ஓடி
உன் –
பார்வைக்குள்ளேயே சிக்கிக் கொண்டது பார்….

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 40

உன்னிடம் பேசிடாத
வார்த்தைகளை
கோர்த்துவைக்கிறேன்
வெறும் கடிதமென
கிழித்துவிடாதே!

Posted in எத்தனையோ பொய்கள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 39

உன் கடிதத்தின்
முடிவில் –
பிரிந்துவிடுவோமேன்று எழுதவா
இவ்ளோ பில்டப்பு!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக