Tag Archives: அம்மா

80 ஞானமடா நீயெனக்கு..

1 உன் வாசனையில் உயிர் சுரக்கும் இன்பம் எனக்கு, எல்லாம் கடந்து விடுகிறாய் நீ உனை விட எந்த வெற்றியோ ஆசையோ – பெரிதாகப் படவேயில்லை எனக்கு, உன் சிரித்த முகம் பார்த்து பார்த்து பூமியெல்லாம் மழை பெய்வதுபோல் ஒரு துள்ளலில் மிதக்கிறேன் நானும், வாழ்வின் – கொடுமைகள் ஆயிரம் இருக்கலாம் வருத்தங்கள் ஆயிரம் இருக்கலாம் … Continue reading →

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வளைகுடாவிலிருந்து; அன்புள்ள அம்மாவிற்கு மகனெழுதும் கடிதம்!!

அன்புள்ள அம்மாவிற்கு, வீடும் நீயும் உறவுகளும் நலமா அம்மா? அப்பாவிற்கு என் வணக்கத்தையும் அன்பையும் சொல்லுங்கள் அம்மா. நானும் நண்பர்களும் உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் இங்கு நலமாக உள்ளோம். நலமெனில், உணவிற்கு பஞ்சமின்றி உடுத்தும் ஆடைக்கு பஞ்சமின்றி உடனிருக்கும் தோழமைக்கு பஞ்சமின்றி நலம். இது ஒரு வேளைதவராமல் மருந்துண்ணும் கட்டாய வாழ்க்கை அம்மா. ஏழுமணிக்கு வரிசையில் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

42 என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!

எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட உலகம் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க – எமக்கு ஒற்றைத் தலைவனை காலம் – கணித்துப் பெற்றவளே ; சொந்தம் கடலென மண் நிறைந்தும் மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி நிராகரித்த வஞ்சகத்தார் – சுவாசித்த சிறு மூச்சும் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

75 ஞானமடா நீயெனக்கு..

1 சிலநேரம் நீ வயிற்றிற்குள் அசைவதே இல்லை, பதறி போவேன்.. சூடாக ஏதேனும் குடி அசையும் என்பார் அம்மா., சூடு ஒருவேளை உனக்கு பட்டுவிடுமோ’ என்று அஞ்சி யாருமில்லா அறைக்கு சென்று வயிற்றில் கை வைத்து ஏய்……. என்ன செய்கிறாய்; அப்பாவிடம் சொல்லவா என்பேன், எட்டி………… ஒரு உதை விடுவாய் நீ எனக்குத் தான் சுளீர் … Continue reading →

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

70) ஞானமடா நீயெனக்கு..

1 நீ எட்டி எட்டி உதைத்துக் கொண்டிருந்த எத்தனையோ நாட்களின் – என் தூக்கம்; உன் காலடியில் தான் இமைகிழிந்துக் கிடந்தது!! ———————————————– 2 நீ சாப்பிட்டு வைத்த மிச்சத்தை எடுத்துக் கொண்டு உடம்பெல்லாம் ஓடியது என் ரத்தம்! ——————————————- 3 உனையும் பாப்பாவையும் மாற்றி மாற்றி கொஞ்சுவோம், உனக்கு தெரியாமல் அவளிடமும் அவளுக்கு தெரியாமல் … Continue reading →

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்