Tag Archives: பண்பாடு

டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..

கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா? பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல அமரும் மௌனத்தின் கணம் கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு., ஒவ்வொரு வார இதழ்களின் பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப் புரட்டுகையில் தனது கவிதை வெளிவராத இதழ் தீயைப் போலே உள்ளே இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது., … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

39, மனைவியென்பவள் யாதுமானவள்..

நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது வார்த்தைகள்.. உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும் கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை; கவிதையின் லயம் பிடித்து வரிகளாய்க் கோர்க்கிறேன் உள்ளே நீயிருக்கிறாய், என் பசியறிந்தவளாய் என் உறக்கத்தின் அளவறிந்தவளாய் என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்.. காற்று வீட்டுச் சுவர் உன் துணிகள் எங்கும் தொடுகையில் உன் முகம் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒழுக்கம் விழுப்பம் தரும்..

ஒரு காலதவத்தின் வரம் கடவுள் கற்பிக்கும் கடவுளர் குணம்; காற்றின் அசைவிற்கும் காரணம்  புரிவிக்கும் பலம்; ஒழுக்கம்! உண்மை நேர்மை கண்ணியத்தின் வெளிப்பொருள், மானுடப் பூச்சிக்கு முளைக்கும் மனித சிறகு; மாந்தரின் அஞ்ஞானத்தை மனிதம் வலிக்காமலகற்றும் பெருவழி; ஒழுக்கம்! விலங்கின் ரத்தம் சொட்டும் நாக்கிலும் மதிப்பூறும் உயர்ந்த மனித வாசம்; மானுடத்தின் பெருமித பிறப்பின் அடையாளம்; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கல்லும் கடவுளும்..

மூடிய கண்களின் ஆழத்தில் பளிச்செனத் தெரிகிறதந்த வெளிச்சம்; வெளிச்சத்தை உதறிப் போட்டு எழுந்தேன் கடவுள் கீழே கிடந்தார்!! பாவம் கடவுளென தூக்க நினைத்தேன் – விழுந்தவர்கள் பலர் நினைவில் வர விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன் உன் கோபம் நியாயம் தான் உன்னை இப்படி படைத்தது என் குற்றம் தானே என்றார் கடவுள் உளறாதே நிறுத்து உன்னை … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

36, கைம்பெண் அவளின் காலம்..

சாப்பாடென்ன சாப்பாடு அது வெறும் நெஞ்சுக் குழிவரை விழுங்கி விழுங்கா உன் நினைவு அதலாம் கடந்து கடந்து நிற்கிறது மகளே.. ஏழையின் குடிசையில் அன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில் நீயும் பிறந்தாயே.. விதவை என்றாலே வெற்று நெற்றியில் காமம் தடவி வயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று கட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க கண்ட … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்