Tag Archives: ரத்தம்

42, உடல்நெய்யும் சாபக்காரி..

அவள் பாவம்.. அவளின் உடம்புதான் அவளுக்கு சோறுபோடும் எந்திரம் அவளின் உடம்பு தான் அவளின் உயிர்குடிக்கும் சாபமும்., உடம்பை உடம்போடு எரித்துதான் சோறு சமைக்கிறாள் உடல்நெய்துதான் ஆடை அணிகிறாள் குழந்தை வளர்க்கவும் கணவன் குடிக்கவும் உடல்தான் அவளுக்குப் பணமாகிறது., இரவின் அழகை உடுத்தி உடம்பின் வெளிச்சத்தில் மயக்கி குவியும் பணத்தில் சோகந் தாங்கி சொர்கத்தின் வாசலைத் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

41, என் தோழிக்கும் எனக்குமொரு காதலிருந்தது..

கவிதைகள் உரசிக்கொள்ளும் இரவின் மொழிதனில் பிறக்கிறது உனக்கும் எனக்குமான சிநேகம்.. இருட்டை உடைத்துப் பிறக்கும் கனவுகளில் தேடிக் கிடைத்த உனக்கான வசியச்சொற்களின் அலங்காரத்தோடு திறக்கிறது கண்களும் மனசும்.. கொட்டித் தீர்க்கும் ஆசைகளை வானம் மடிந்துகொள்ளும் மனசிரண்டில் பதுக்கிக்கொள்ள முதலில் கேட்ட உன் பார்வைக்கே பரிசும் காதலும்.. எழுதிக் கரையாத உணர்வுகளாய் ஏக்கத்தின் பெருமூச்சொன்று வெளிச்சேர்ந்த தருணத்தில் … Continue reading →

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40, அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு..

எனக்கொரு வீடு இருந்தது.. அங்கே எனக்கொரு போர்வை எனக்கென ஒரு தலையணை எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது.. என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன் தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்.. வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும் நான்கு கைகொண்டு வீடு எனை அணைத்துக் கொள்ளும்.. எட்டி வெளியே பார்த்தால் வாசலில் மல்லிகைத் தெரியும் மல்லிகை … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

39, மனைவியென்பவள் யாதுமானவள்..

நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது வார்த்தைகள்.. உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும் கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை; கவிதையின் லயம் பிடித்து வரிகளாய்க் கோர்க்கிறேன் உள்ளே நீயிருக்கிறாய், என் பசியறிந்தவளாய் என் உறக்கத்தின் அளவறிந்தவளாய் என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்.. காற்று வீட்டுச் சுவர் உன் துணிகள் எங்கும் தொடுகையில் உன் முகம் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

36, கைம்பெண் அவளின் காலம்..

சாப்பாடென்ன சாப்பாடு அது வெறும் நெஞ்சுக் குழிவரை விழுங்கி விழுங்கா உன் நினைவு அதலாம் கடந்து கடந்து நிற்கிறது மகளே.. ஏழையின் குடிசையில் அன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில் நீயும் பிறந்தாயே.. விதவை என்றாலே வெற்று நெற்றியில் காமம் தடவி வயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று கட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க கண்ட … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்