Tag Archives: வித்யாசாகர் கவிதை

தொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை..

நான் அன்றும் இறந்திருக்கவேண்டும் இருப்பதைத் தொலைத்த அந்த வலி அத்தனை கனமானது; விமானமேறி நாடுகடந்து நான் ரசிக்கும் தெருக்களையெல்லாம் வெறுத்துக்கொண்டு வாய்மூடி உயிர்தேம்பியழுத கணமும் அவளை ஒருமுறையேனும் கண்டுவிட ஓடிய ஓட்டமும் தவிப்பும் எனை எரிக்கும்வரை எனக்குள் வலியோடிருக்கும் வானம் கிழிவதைப் போல அன்று அறுபட்ட மனதில் அவள் அப்படி வலிப்பாளென்று நினைக்கவேயில்லை காதாழம் சிதைக்கும் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை!

ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள் எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய் வந்துவிழுந்தது அவரின் மரணம்.. மரணம்; பெரிய மரணம் இல்லாதுப் போவது மரணமா? பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர் அவர்களென்ன பிணமா? பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள் அவரின் மரணத்திற்குப் பின் அவளின் பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும் மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

7, மறுபடி பிறந்தாலும் அந்தத் தெருவில் பிறக்கவேண்டும்..

ஒரு காலஇடைவெளியின் கண்களோடுத் திறக்கிறது எனக்கான பார்வை.. நெடுங்காலத்திற்குப் பிறகு மீண்டுமந்த பழைய ஊருக்குச் செல்கையில் மரங்கள் வெட்டப்பட்டிருந்தன ஜூலி இறந்துப் போயிருந்தாள் மாடுகள் வளர்ப்பு அறவே அங்கு காணோம் ஆடும் கோழிகளும் கறிக்காக மட்டுமே கொண்டுவரப்பட்டது முருகன் அண்ணன் இறந்துப் போயிருந்தார் இட்டிலி விற்கும் ஐயா காய்கறி மாமா யாருமில்லை அங்கு.. யாருமில்லா அந்தத் … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மழை; மழையதை வேண்டு..

மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்; மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை மழையில் நனைந்ததுண்டா நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்.. நாமுண்ணும் ஒவ்வொரு … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

43, விடுமுறை நாட்களின் தனிமையும் அவளில்லாத வீடும்..

“என்னங்க சாப்பிட்டீங்களா?” “ம்ம் சாப்பிட்டேம்மா” “நேரத்துக்குத் தூங்குறீங்களா?” “தூங்குறனே?” “மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?” “ம்ம்…” “ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“ கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்.. எனக்கு அவள் உடனில்லாததை விட பசியோ, உறங்கா விழிகளோ மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ தொண்டைக்குழி அடைப்பதில்லை.. மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து அவளை நினைத்துக் கொள்கையில் குணமாகிப் போகிறது என் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்