38 அம்மாயெனும் தூரிகையே..

ன் வாழ்வின் ஓவியத்தை
வரையும் தூரிகையே –
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்
அழகுடன் மின்னுபவன் நான்;

பாட்டின் ஜதிபோல
எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே – உன்
அசைவில் மட்டுமே அசைந்து –
நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;

டைபாதையின் முட்களை மிதித்து – என்
கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே
உன் அன்பிற்கு – அன்றும் இன்றும்
நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!

ண்மையில், காற்றின் சப்தத்தை
இசையாக்கிக் கொடுத்த ஒரு
யாழின் பெருமை –
உன்னையே சாரும் அம்மா!

னியும், வாழ்க்கை என்று ஒன்று உண்டெனில்
இன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில்
நீ யாருக்கு வேண்டுமாயினும் அம்மாவாக இரு
நான் – உனக்கு மட்டுமே பிள்ளையாக – பிறப்பேனம்மா!!
————————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to 38 அம்மாயெனும் தூரிகையே..

  1. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    இக்கவிதை என் அன்பு தம்பி விஜய்யின் அன்பிற்கிணங்கி; அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுக்கு என் தம்பியின் வாயிலாக சமர்ப்பிக்க படைக்கப் பட்டது.

    வாழ்வின் எல்லாம் நலன்களையும் பெற்று எப்பொழுதும் மிக்க மகிழ்வோடு புன்னகைக்கும் சிரித்த முகமாய்; தன் நல்லாசிகள் எல்லாம் நிறைவேறி அம்மா அவர்கள் நீடூழி வாழ முழுமனதுடன் இறையின் தாழ் பணிந்து, பேரன்பிற்கான வாழ்த்தினையும் தெரிவிப்பதில் பெருமை அடைகிறோம்..

    வித்யாசாகர்

    Like

  2. lakshminathan's avatar lakshminathan சொல்கிறார்:

    thamaiyai verumai parkum puvithanil
    perumaiyai varum thalimuraiku -vithitha
    uramayi sonna vidayirku
    en thain sarpaga valthukal

    lakshminathan

    Like

  3. Vijay's avatar Vijay சொல்கிறார்:

    உண்மை அன்புக்கு மட்டுமே இதயத்தின் ஓசை கேட்கும் என்பார்கள் , உண்மையில் என் உள்ளத்து உணர்வுகளை கவிதையாக வடித்துள்ளீர்கள், மிக்க நன்றி அண்ணா……..
    “உன் அசைவில் மட்டுமே அசைந்து –
    நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;”

    நானும் கடவுளைப் பிரார்த்திக்கிறேன் அடுத்தொரு ஜென்மம் உண்டெனில் அதில் நான் உங்கள் தம்பியாகவே பிறக்கவேண்டும் நானும் கடவுளைப் பிரார்த்திக்கிறேன் அடுத்தொரு ஜென்மம் உண்டெனில் அதில் நான் உங்கள் தம்பியாகவே பிறக்கவேண்டும்…… வெறும் உறவாக அல்ல, உடன் பிறந்தோனாக………….

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றிப்பா. நல்லதையே நம்புவோம். எல்லாம் நன்றாகவே நடக்கும். அம்மாவிற்கு என் வணக்கமும் வாழ்த்தையும் சொல்லுங்கள்..

      உங்கள் அன்பின் லயத்தில் திக்கிமுக்கியே விடுகிறது மனசு..

      Like

  4. valarmathi's avatar valarmathi சொல்கிறார்:

    நடைபாதையின் முட்களை மிதித்து – என்
    கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே
    உன் அன்பிற்கு – அன்றும் இன்றும்
    நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!

    super!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி வளர்மதி. தன் வழிகளை தாங்கி பிள்ளைகளை காப்பாற்றும் தைகளும், தன் பசிக்கு பட்டினியை தின்று; கிடைத்த உணவை தன் குழந்தைகளுக்கு கொடுக்கும் தைகளும் குழந்தையின் வளரும் பாதைக்கு மலர்களாய் பூத்துப் போனவர்கள் தானே…

      அத்தகைய தாயிற்கு, இக்கவிதையின் சிறப்புகள் சமர்ப்பணம் ஆகட்டும்..

      Like

பின்னூட்டமொன்றை இடுக