மினுக்கும் தங்கத்தில்
சிணுங்கி பிறந்தவளோ,
ஒரு சிங்கார சிரிப்பிற்குள்
எனை உயிரோடு கொள்பவளோ;
கடக்கும் பொழுதெல்லாம்
எனை காதலால் குடிப்பவளோ,
ஒரு கையளவு மனசாலே –
எனை காலத்திற்கும் சுமப்பவளோ;
தொடும் காற்றோ;
தொடாது சிலிர்க்கும் பூவிதழோ,
உள்புகும் ஆசை நெருப்போ –
உயிர்வரை பதிபவளோ;
உணர்வுகடலில் உயிர்த்தெழுந்த
ஒற்றை பாடலின் ரெட்டை அர்த்தமோ;
எதுவாகியும் –
எனக்காய் வாழ்பவளோ;
கடலோர மணற்பரப்பாய்
மனசெல்லாம் நிறைந்தவளோ,
நான் தொட்டிடாத ஒரு கணத்தில் –
கவிதையாய் சிலிர்ப்பவளோ;
கடைத்தெரு நடக்காமல்
முகத்தில் தாவணி வீசிய புன்னகையோ,
கனவுகளுக்குள் புகுந்து பகலை –
இருட்டிற்குள் தொலைப்பவளோ;
காற்றிடம் பேசி எனை
தென்றலாய் தரிப்ப்பவளோ
நதியிடம் சொல்லிக் காதலை –
இதயக் கடலுக்குள் கரைப்பவளோ;
மனசெல்லாம் பல் தைத்து
ஒரு ஓரப் பார்வையில் தின்பாளோ,
ஒரேயொரு யுத்தம் செய்தேனும் –
என்னை ஏழுபிறப்பிற்கும் கொள்வாளோ;
தென்றலோ; நிலவோ; மலரோ;
எல்லாம் கடந்தவளோ நீ;
இவை ஏதுமற்ற காதலியோ –
எனக்கே எனக்காய் பிறந்த நீ – என் எல்லாமாய் ஆனவளோ!!
———————————————————————————————————-
வித்யாசாகர்
கதாநாயகனுக்கு பெண் பார்க்கிறார்கள். அவனுக்கு அவள் எப்படி இருப்பாள் என்று ஒரு பாட்டு எழுதும் காட்சி. அந்த காட்சிக்கு இந்த பாடல் பதிவானது..
LikeLike
kathanayaganin kathal vetri yada valthukkal
LikeLike