39) மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..

குருதி வடிக்கும் கண்களின்
வருத்தம் புரியா உலகமிது;
நின்று யோசித்து நிமிர்கையில் – காலம்
அதோ எங்கோ போகிறதே….!!

சுதந்திரம் விடுதலை என்று கேட்ட வாய்க்கு
ரத்த காட்டாறும் சொட்டு ஆறுதல் கண்ணீருமே மிச்சமா?
சோர்ந்து போகாத ஒரு இனத்தின் கூட்டம் உலகமெலாம்
பரவி இருந்தும், மௌனத்தில் மூழ்கியதேனோ?

சொல்லி அடித்த பரம்பரைதான்
புது ரத்தம் தேடி – அலைகிறதோ;
உயிர் செத்து மடிந்த சேதி கேட்டும்
சுடும் கோபம் விடுத்து மரமானதுவோ?!!

யோ; மரம் கூட ஆயுதமானது
இந்த மனிதர் ஏனோ மனிதமிழந்தார்,
கோபம் துறந்தார், குழந்தை கண்கீறி ‘கிழவி உடல் அறுத்தும்
எல்லாம் சகித்தாரே????????!!!!!!!!!!!!!!!

றையே!!!!!! இதில் ஏனோ நீயும் குருடானாய்
நீ இல்லையென்று முழங்கவும் இச்செயலால் ஆளானாய்
உனை வாரி இறைத்து மண்ணென சொல்லுது மனமும்
உன் கால் பிடித்தே அழுகிறது தினமும்;

ருப்பு ஜூலை, கீழ் வெண்மணி அவலம்
செஞ்சோலை கொடூரம், முள்ளிவாய்க்கால் படுகொலை
மாவீரர்களின் நினைவு நாட்கள் என இன்னும்
எத்தனை எத்தனை கருப்பு நினைவுகளில்; வாழத் தகுமோ அம்மக்கள்??!!

லகெல்லாம் செய்தியாகி, கொஞ்சம் உணர்வு பொங்கி கவிதையாகி
இத்தனை பேர் மாண்டார்கள், இப்படி ஓர் துயிலம் அழிக்கப் பட்டது
இப்படி ஒரு கொடூரன் இருந்தான் என்று வரலாறு சொல்ல மட்டுமே
இத்தனை உயிர்களின் பலியும், காலம் சுமந்த போராட்டமுமா????

ல்லை இல்லை; காலத்தின் கண் மூடப் படவில்லை
அநீதிக்கான இயற்கையின் தண்டனை கிடைத்தே தீரும்,
கடவுள்; அம்மக்களின் விடுதலை தேசத்து நிம்மதியில்
கண் திறப்பார்’ எனில் – நானும் நம்புகிறேன், ஈழம் மலரும்!!
———————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 39) மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..

  1. இக்பால் செல்வன் சொல்கிறார்:

    ஈழம் மலரும் மலரும் என்று எத்தனைக் காலம் சொல்வீர்கள்…..

    ஈழம் என்ன மலரா ? மலரும் என்று நாமிருக்க ! கண்டவனும் கசக்கி போட்டுவிட்டு போக.. ஈழம் நெருபபு. அது வெடிக்கும் எரிமலையாய். வெடிக்கும் …………………….

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      சொல்வதன் மூலம், மலர்விக்கப் படுமேனும் நம்பிக்கையன்றி வேறென்ன இக்பால். வெடிக்குமோ திறக்குமா; நம் நோக்கம் எல்லாம் அம்மக்களின் விடுதலை, அதற்கான விடிவு மட்டுமே..

      வேறென்ன இருந்து விடும் அதை விடுத்து எனை போன்றோருக்கு..?

      ஒருவன் துடிக்கையில் துடிக்கும் மனது, இத்தனை பேரை கொன்று குவித்ததை பார்க்க பார்க்க நினைக்க நினைக்க வலிக்கிறது தானே? அப்படி வலிக்கும் மட்டும் சொல்வோம், அம்மக்களுக்கான தனி தேசமான ஈழம் கிடைக்கும் வரை சொல்வோம்…

      நாலு பேரின் நம்பிக்கைக்கு ஒட்டுமொத்த ஒரே சிந்தனைக்கு, எல்லோரின் நினைவலை கடத்தும் அதிர்விற்கு; அதை செயலுறுத்துவதற்கான சக்தியும் உண்டென்பது இயற்கையின் ஆற்றல்.

      அந்த ஆற்றலை பயன்படுத்தியேனும், தன்னால் இயன்றதையேனும் செய்துவிடுவோம் எனும் ஓர் அக்கறையின் எழுத்து மட்டுமே எனக்கானது இக்பால் செல்வன். தங்களின் கருத்திற்கு மிக்க நன்றியும் அன்பும் உரித்தாகட்டும்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக