விடுதலையின் சப்தம், வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை, பிரிவுக்குப் பின், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள், எத்தனையோ பொய்கள், உடைந்த கடவுள், சில்லறை சப்தங்கள் போன்ற நம் புத்தகங்கள் வெளியாகி தற்போது விற்பனையில் உள்ளன!
நம் படைப்புக்கள் எல்லாம் சென்னையில் ஹிக்கீம்பாதம்ஸ், (நியூ புக் லேன்ட்) புதிய புத்தக உலகம், ஈக்காட்டுத் தாங்கல் மாறன் புக் பேலஸ், சைதாப்பேட்டை புகைவண்டி நிலையத்தின் எதிரிலுள்ள சந்தியா புத்தக நிலையம், மணலியிலுள்ள அருணாச்சலம் கடை போன்ற இடங்களில் கிடைக்கின்றன. அதிக இடங்களில் பத்து விழுக்காடு தள்ளுபடியோடு தருகிறார்கள்!
நூற்றுக் கணக்கில் புத்தகம் பெறுவோருக்கும் விற்பனைக்கென வாங்குவோருக்கும் முப்பது முதல் நாற்பது விழுக்காடு தள்ளுபடியில் பெற முகில் பதிப்பகம் (mukilpublications@gmail.com) தமிழலை ஊடக உலகத்தை tamilalai@gmail.com அணுகலாம்!
மொத்தத்தில் நம் படைப்புக்கள் எல்லோரும் வாங்கிப் படிக்க ஏதுவாக மிக குறைந்த அளவு விலையே வைத்து விற்கப் படுகின்றன. விற்கும் பணமும் சமூக நலனுக்கென கொடுத்துதவப் படுகிறது.
தற்காலிகமாக யாருமற்ற வயது முதிர்ந்த இருவர் வசிக்கும் வீட்டை வரும் மழைக்காலம் கருதி மொத்தமாக திருத்தியமைத்துக் கொடுத்ததை தங்களின் தெரிவிற்கென தெரியப் படுத்துகிறோம்!
நன்றிகளுடன்..
வித்யாசாகர்
அன்புள்ள சகோதர்/சகோதரி,
மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!
பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.
தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
நன்றி.
அன்புடன்,
அதிரைக்காரன்
adiraiwala@gmail.com
LikeLike