Monthly Archives: ஒக்ரோபர் 2011

13 என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்….

வாழ்வின் பாடங்களில் கிழிந்த பக்கங்களின் ஒவ்வொன்றையும் எடுத்து தன் சிரிப்பில் ஒழுகும் எச்சிலால் ஒட்டிவிடுகிறாய்; இதயம் தைக்கும் ஊசியென என் அறுந்த மனதின் கிழிசல்களில் உன் நிறைவுறாத வார்த்தைகளைப் போட்டு பிறந்த பயனை நிரப்புகிறாய்; தத்தி தத்தி நடந்துவந்து எனை எட்டியுதைக்கும் ஒற்றை உதையில் என் மெத்த கர்வத்தையும் இலகுவாக உடைத்து உடைத்து வீசுகிறாய்; நீ … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு…..

1 ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும் ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை அறியாமலே குப்பையில் கொட்டப் படுகிறது தினமும் பழைய சாதம்!! ——————————————————————– 2 மணக்க மணக்க உண்டுமுடிக்கும் முன் ஒரு கை சோறு ஒதுக்கி பிறருக்கும் தர இயலுமெனில் ஒரு உயிரேனும் உயிர்  பிழைக்கும்!! ——————————————————————– 3 டீ  குடித்து பண் தின்று வாழ்பவர்களுக்கு சாபம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

2 அறிவு தரும் ஆனந்தம்..

உலகே உலகே காது கொடு ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு மனமே மனமே பாடுபடு – படிப்பால் வாழ்வை வென்று எடு; படிக்கப் படிக்க வளர்ந்துவிடு எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக் கண்ணைத் திறந்தே யொழித்துவிடு; படிப்பு கொடுக்கும் தைரியத்தில் பட்டம் சுமந்துக் காட்டிவிடு படிப்பால் நாளை உலகத்தின் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி!!

அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம், பெருமதிப்பிற்குரிய சகோதரி கவிதாயினி திருமதி. லதாராணி அவர்கள் எழுதிய நம் உடைந்த கடவுள் கவிதைத் தொகுப்பிற்கான ஆய்வுரை இங்கே தங்களின் பார்வைக்கு பதிவிடப் படுகிறது. பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்: http://vidhyasaagar.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/ புத்தகங்களைப் பெற விரும்புவோர் mukilpublications@gmail.com அல்லது vidhyasagar1976@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மடலெழுதி தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றிகளும் … Continue reading

Posted in அணிந்துரை, உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

1) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்….

அடியே என்னவளே மனசெல்லாம் நிறைந்து நின்னவளே, திரும்பிப் பார்த்து பார்த்தே இதயம் கொண்டுப் போனவளே… நீ போன இடத்திலிருந்து ஒரு புயலே மனசில் அடிச்சிதடி நீ சிரிச்ச சிரிப்புலத் தான் உசிரே உன்னில் கெறங்குதடி; பார்த்த பார்வையில் மான் துள்ள ஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி மூடாத கடலைப் போல மனசு உன் நினைப்பிலேயே … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்