Monthly Archives: நவம்பர் 2011

கவிதாயினி திருமதி ராணிமோகனின் கவிதைகள்..

ஈழத்தை அவள் பார்ப்பாள்; மோனா லிசா!! பெண்களில் பேறு பெற்றவளே பேசாமல் பேசும் ஓவியமே சித்திரதிற்குள் சிதைந்திடாத, பேரழகே நீ கற்பனையில் விளைந்தவள் அல்ல; லியானர்டோ டாவின்சின் கண்களில் பதிந்து, இதயத்திற்குள் பிம்பமாகி பிறந்தவள். பாரிஸ் நகரில் – உன்னை ஒளிந்திருந்து பார்க்க நினைப்பவர்களையும் நீ ஓர கண்களால் பார்த்து விடுகிறாயமே.., அப்படி என்ன உன்னிடம் … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

குவைத்தின் ஈரக் காற்றில் எழுப்பப்பட்டன, மாவீரர்களுக்கான மீண்டுமந்தக் குரல்..

ஆயிரம் கைகளை விரித்துப் பறந்துக் கொண்டிருந்த பாலைவனக் காற்றின் குளிரின் நடுக்கத்திற்கிடையே அந்த இதயங்கள் விடுதலையின் வெப்பத்தையே முழுக்கச் சுமந்துக்கொண்டு மாவீரர்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் அலசி’ மீண்டும் கேட்போர் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்க, உணர்வுகளில் தகித்துத் தகித்து ஈழக் கனவினை எல்லோர் எண்ணத்திலும் சமைத்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வு.., அந்த அரங்கம். குவைத் தமிழர் கூட்டமைப்பின் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..

தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே… காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே… தமிழினமே… தமிழினமே… என் தமிழினமே… எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு (சிறுகதை)

முக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து வருவதாகவும், போர் இரண்டு நாடுகளிடையே பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டும் மறுப்புத் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை)

தேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம்; அதே … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்