30, இரண்டு சொட்டுக் கடல்..

sabdhathai mownathaal udaikkiren

 

 

 

 

 

 

 

 

 

 

த்தத்தில்
மறையும் உலகை
மௌனத்தால் திறக்கிறேன்.,

ரத்தத்தில்
உறையும் மனிதத்தை
அன்பினால் பிரிக்கிறேன்.,

முத்தத்தில்
ஊறும் மனதிரண்டை
இதோ இதோ –
உனக்காக ஒன்றும்
எனக்காக ஒன்றுமாய்க் கேட்கிறேன்..

உலகெங்கும்
பூக்கும்
புன்னகையனைத்தையும்
மனதால்
பறித்துக்கொண்டு வா பெண்ணே

முத்தங்களின்
சிறகு ஒன்று நீ
மற்றொன்று நானாய்
அன்பிருக்கும் வானமெங்கும் பறப்போம்
.
அன்பு தீரும்போது
அங்கேயே
இறப்போம்..

நம் இறப்பு சொட்டும்
மழைதோறும்
ஈரந்தோறும்
கடல்
கடலாய் கடலாய்
இப்பூவுலகு
வனமாய் வனமாய்
வெளியெங்கும் அழகு சொட்டச் சொட்ட
மீண்டும் –
புதிதாய்ப் பிறக்கட்டும்!!!
————————————————-

idhu aanalai adhu pennalai

து ஆணலை
அது பெண்ணலை
ஆனால் –
இரண்டுமே கடல்..

இது நீலம்
அது வெள்ளை
ஆனால் –
இரண்டுமே வானம்..

 

இது காற்று
அது நீர்
ஆனால் –
இரண்டுமே உயிர்..

இது உயிர்
அது உடல்
ஆனால் –
இரண்டுமே நீ..

என் நீ!!
——————————————–
வித்யாசாகர்

 

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to 30, இரண்டு சொட்டுக் கடல்..

  1. வணக்கம்
    அண்ணா

    கவிதையின் வரிகளில் உத் வேகம் பிறக்கிறது.. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்–

    Like

  2. வணக்கம்
    அண்ணா

    எனது புதிய வலைத்தளம் வாருங்கள் வந்து கருத்து தாருங்கள்
    http://www.trtamilkkavithaikal.com/
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழே:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்–

    Like

பின்னூட்டமொன்றை இடுக