போதும் நிறுத்துங்கள்!!
போருக்குத் துணிந்தோரே; பதைபதைக்க
பெண்ணென்றும் பாராமல்’ பெற்றப்
பிள்ளையென்றும் காணமல்; கண்டயிடமெல்லாம்
வெட்டியது போதும் நிறுத்துங்கள்;
வீழ்ந்தது யார் ?
வீழ்ந்தது உன் ரத்தம்; அதில்
எங்கே இருக்கிறது நீ சொல்லும் சாதி?
நீ வெட்டினாலும் சரி, நாளை
உன்னை யாரும் வெட்டி –
துண்டுத் துண்டாக்கினாலும் சரி; எல்லாம் ஒரே
ரத்தம், அங்கே எங்கிருக்கிறது நீ கொன்ற சாதி?
நீ கொன்றது உன்னை
நான் கொல்வது என்னை
நாம் தான் நம்மைக் கொன்று குவிக்கிறோம்,
சாதி இன்னும் அப்படியே
பச்சையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது, மனதிற்குள்;
அதை அறுத்து எறி!!!!!!
சாதி வேண்டாமென்றுச் சொல்லிப்பார்
உனக்கு உன் பிள்ளை
அத்தனை அழகாகத் தெரிவான்,
சாதி வேண்டமேன்றுச் சொல்லிப்பார்’ உன் எதிரி
உன் பக்கத்தில் அமர்ந்து சோறூட்டி மகிழ்வான்,
சாதி வேண்டாமென்றுச் சொல்லிப்பார்’
மிச்சமிருக்கும் நீ நான் இருவருமே மிக
நல்ல மனிதர்களென்று புரியும்..
சாதி ஒரு அடையாளம், அது தானாக
மாறக் கூடியது, அதை நீ மாற்றாமல்
வைத்திருந்ததால்தான் இன்று
நீ மாறிப் போனாய்..
தூக்கி எறி சாதி ஒழியட்டும்..
கையுதறி விட்டு
கட்டியணைத்துப் பார் எல்லோரையும்..
நாம் மகிழ்வோடு வாழவே இவ்வுலகம் – நமக்காகக்
காத்திருக்கிறது..
இந்த வானம் இந்த பூமி மழை காற்று
இரத்தம் சதை எங்குமேயில்லை சாதி; மனதில்
ஒட்டிக் கொண்டிருப்பின் அதை அழித்துவிடு,
நாம் நண்பர்கள்!
நாம் சாதியற்றவர்கள்!! முழங்கு..
முழங்கு..
நம் முழக்கத்தில் புரண்டு எழட்டும் ஒரு
நட்பிற்கினிய சமுதாயம்..
—————————————————–
வித்யாசாகர்
நல்ல உணர்ச்சி மிக்க வரிகள். வாழ்க வித்யா!
உனது விளம்பரம் ஏப்ரல் இதழுக்கு(தாமதமாயினும்) வந்து சேர்ந்தது. உடல்
நலத்தால் இது என்று கேள்விப்பட்டேன் நண்பரே. கவனித்துக்கொள்ளவும். வாழ்க உன்
உதவிகள்+பணி,
யோகியார்
வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
. என் முகவரி— pl. write in English. or in Tamil&
Buy our (my & Chandar’s )Pure Tamil Good..Mag(monthly)
called இலக்கியவேல்..சந்தா ரூ 120 மட்டுமே ஃபிப்ரவரியிலிருந்து.
Kaviyogi vedham,
2/682, 10th Cross st, Renga Reddy Garden,
NEELANKARAI, Chennai-600115
Cel no-09500088528
.
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
2016-04-08 19:06 GMT+05:30 “வித்யாசாகரின் எழுத்துப் பயணம்” :
> வித்யாசாகர் posted: ” போதும் நிறுத்துங்கள்!! போருக்குத் துணிந்தோரே;
> பதைபதைக்க பெண்ணென்றும் பாராமல்’ பெற்றப் பிள்ளையென்றும் காணமல்;
> கண்டயிடமெல்லாம் வெட்டியது போதும் நிறுத்துங்கள்; வீழ்ந்தது யார் ? வீழ்ந்தது
> உன் ரத்தம்; அதில் எங்கே இருக்கிறது நீ சொல்லும் சாதி? நீ”
>
LikeLiked by 1 person
நன்றி ஐயா.. சமத்துவம் பெருகவேண்டும், அன்பு நிலைபெறல் வேண்டும் எனில் நாமெல்லாம் ஒன்றென்று புரிதல் வேண்டும்.. உடம்பு இப்போது பரவாயில்லை ஐயா..
LikeLike