உடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி!!

அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம்,

பெருமதிப்பிற்குரிய சகோதரி கவிதாயினி திருமதி. லதாராணி அவர்கள் எழுதிய நம் உடைந்த கடவுள் கவிதைத் தொகுப்பிற்கான ஆய்வுரை இங்கே தங்களின் பார்வைக்கு பதிவிடப் படுகிறது.

பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்: http://vidhyasaagar.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/

புத்தகங்களைப் பெற விரும்புவோர் mukilpublications@gmail.com அல்லது vidhyasagar1976@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மடலெழுதி தொடர்பு கொள்ளலாம்.

மிக்க நன்றிகளும் அன்பும் வணக்கத்தொடும்..

வித்யாசாகர்

Posted in அணிந்துரை, உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

1) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்….

டியே என்னவளே
மனசெல்லாம் நிறைந்து நின்னவளே,
திரும்பிப் பார்த்து பார்த்தே
இதயம் கொண்டுப் போனவளே…

நீ போன இடத்திலிருந்து
ஒரு புயலே மனசில் அடிச்சிதடி
நீ சிரிச்ச சிரிப்புலத் தான்
உசிரே உன்னில் கெறங்குதடி;

பார்த்த பார்வையில் மான் துள்ள
ஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி
மூடாத கடலைப் போல மனசு
உன் நினைப்பிலேயே நிரைஞ்சிச்சேடி;

நீ போட்ட சொக்குப் பொடிப் பார்வையின்
சிரிப்போடு சிறுகுழியுமழகு அழகேடி
நீ காட்டுச்செடி பூப் பூத்த
மதுமயக்கத்தை விட உச்சமடி;

மன்மதனோ மதிமயக்கும் எவனோ
எப்படியோ உனை செய்துட்டாண்டி,
உன் ஒரு பார்வைக்கே என் விழிகள் பூத்து
வரம் கேட்டுக்கேட்டு வலியாய் – வலித்தேப்போனதடி;

நீ போகையில் கொண்டுப் போன என் உசிரது
நீ பார்க்கும் பாரவையிலிப்போ தஞ்சமடி,
நானிப்படி உருகி உருகிப் போகும் முன்னே – என்
உசிரப் பிச்சித் திண்ணாம கொஞ்சம் நீ திரும்பி வாடி;

பொட்டு வைத்தஉன் அழகுமுகம்
ரசிக்க ரசிக்க மின்னும்வான மின்னலோடி
அந்த நெற்றி சுற்றும் முடியழகில்
என்னை எப்படியோ முழுசா முடிஞ்சியேடி;

மூச்சுக் காற்றின் வெப்பமதில் நீ
கடந்துப் போன உன் வாசம்’ நிறைய மிச்சமடி
உன் மீண்டும் பார்க்குமொரு பார்வைக்கு என்
ஒன்றோ இரண்டோ பிறப்பு’ அத்தனைப் பெரிதொன்றுமில்லையடி;

நீ வராவிட்டாலுன் கனவில் வந்துப் பூப்பேன் பார்ப்பேன்
ஒரு பார்வையெனை பார்த்துக் கொள்ளடி
நாளை சேர்ந்து நாம் பேசிக் கொள்கையில்
இந்த ஒன்றோ இரண்டோ வரியில்’ கொஞ்சம் நீ சிரித்துக் கொள்ளடி;

ஆஹா சிரிப்போ சிரிப்போ சிரிப்பு
நீ சிரிச்சா இந்த சீவனுக்குள் ஜென்மமேழும் செத்துமடியுமடி,
அந்த சிரித்தஉன் உதட்டோரம் என் மிச்சவாழ்க்கையை
மீண்டுமொரு சிரிப்பிற்கே சேமித்து வைப்பேனடி!!
—————————————————————-
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

முகுந்தை உ.கு. சிவகுமாரின் கவிதைகள்..

திருக்குறள் பெருமை!!

கர(ம்) ஆதி அடங்கிய முதன்மறை
அகில உலக அனுபவப் பொதுமறை
அறம் பொருள் காமத் திருமறை
ஆதாரம் புதைந்த நிதர்சன வழிமுறை!

எறும்புகள் ஊர்ந்திட மலையும் தேயும்
குறுவெண் பாவில் இதயம் கரையும்
குறலின் உன்னதம் கற்றவர் அறிவர்-மற்றவர்
குருவின் பயிற்சியில் தெளிவு அடைவர்!

வள்ளுவப் பெருந்தகை எழுதுகோல் எடுத்தார்
வான் மண்ணை மறந்தே அமர்ந்தார்
வாழ்வியல் சூத்திரம் கேள்வியாய் தொடுத்தார்-காலம்
வாழும் சரித்திரம் பதிலாய் தந்தார்!

காலத்தால் அழியா அறிவை கற்க-நாம்
கைப்பிடித் தழைத்தது எப்பா லென்றாள்
தப்பாமல் சொல்வேன் உறுதியாய் அறிவர்-அது
தாய்பால் தமிழ்பால் திருக்குறட்பா வென்று!

நித்தமொரு சப்தம் உலகின் மொழியில்
நிற்குமா அவலம் மனிதனின் வழியில்
உரைத்தார் அண்ணல் ஊன் நின்று- கால
வரைமுறை சொல்லி நன்மறை பயிற்று!

இயற்கையும் இல்லாலும் இனிமையின் இணைகள்
இதற்கேதும் உண்டிங்கோ ஈடிணை என்றார்
இளமையில் இனிமை கரைந்திட விழைந்தார்-காம
இலைமறை கனியாய் காதலை விதைந்தார்!

மூச்சின் பேச்சில் முக்தியை மறைத்தார்
மூழ்கி முத்தெடுத்து வாழ்ந்திடச் சொன்னார்
ஆட்சி பீடத்தில் மக்களை அமர்த்தி-மனிதன்
ஆண்டாள் மகத்துவம் பெருகிடும் என்றார்!

கனவுகள் காணுங்கள் உற்சாகம் என்றார்
கடமைகள் திறம்பட செயலில் கொண்டார்
உழைப்பை ஒருபடி மறுபடி உயர்த்தி-நல்
ஒழுக்கத்தில் அமைதியை முறைப்படி கண்டார்!

இன்றைய தேசத்தின் இறையாண்மை காத்து
திருக்குறள் பறைசாற்றும் நெறிமுறை பயின்று
வாழ்வியல் கடமையை நிறைவுற செய்தால்-நாமும்
நீதிநெறி கண்டு அவ்வழி வாழ்ந்து நிதர்சனம் பெறுவோம்!
———————————————————————————————————————
முகுந்தை உ.கு.சிவக்குமார், குவைத்.

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

1 ஆணலையும் பெண்ணலையும் அழகிய தீயாகி!!

டல் –
பல காட்சிகளை விழுங்கிக் கொண்டு
கரை வரும் போதெல்லாம்
ஒரு குறிப்பெடுத்தே உள்புகுகின்றன;

கால் நனைத்த கடலின் உப்புவாசத்தில்
ஒருதுளியும் –
மர்மமாய் தனக்குள் வைத்துள்ள
மரணத்தின் எண்ணிக்கையை
யாரும் தட்டிக் கேட்டிடாத மமதை
கடலுக்கு இருப்பதேயில்லை;

தோண்டத் தோண்டக் கிடைக்கும்
வரலாறுகளை
விழுங்கியதன் தடங்களை மறைத்து
அலையலையாய்
அடித்துக் கொண்டிருக்கின்றன கடலின்
ஒவ்வொருக் கரையுமென்பதை
காதில்
சொல்லிச் சொல்லியேப் போகிறது
ஆணலையும் பெண்ணலையும்..

உணர்வின் வழியே நின்று
எதையோ உசுப்பும்
ரத்தமென
கடல்
மணலின் உள்புகுந்து மேல்நின்று
உலகத்தின் அழிவை யாருக்கும் காட்டாமலே
உப்போடு கரைத்தே வைத்திருக்கிறது;

மூழ்காத கடலின் நடுவில் நின்றும்
தன் அழிவை மறந்து
ஆடும் மனிதர்களை
கடல்
எப்படியோ
மன்னித்தும் விடுகிறது,

சிலநேரம்  கடலும் தன்
கோரப் பல் இளித்து
ஆணலையையும் பெண்ணலையையும்
தன் கரையொழிக்கும் தீயாக்கி
நல்லோர் பொல்லாரையெல்லாம்
நடுக் கடலிலாக்கிக் கொன்றேத் தொலைக்கிறது; உயிர்
தின்றேத் தீர்க்கிறது; குடிசையெனத் தெரிந்தும்
பெற்றக் குழந்தையோடும் கலைக்கிறது…

கால் கை நறுக்கி மனிதரின் வரலாற்றை
முடமாக்கியே அமர்கிறது!!
————————————————————————————
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

45 பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்!

மௌனம் உடையா பொழுதொன்று நிலவும்
முகமெல்லாம் ஒரு சோகம் படரும்
நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும்
அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்;

உடை கூட ஆசை களையும்
உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும்
உறக்கமது உச்சி வானம் தேடும்
உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்;

பகலெல்லாம் பொழுது கணக்கும்
சட்டைப்பை சில்லறைத் தடவும்
முந்தானை ஓரத்தில் ஒரு கல்லேனும் முடியும்
படுக்க அன்றாடம் சுடுகாடே தேடும்;

காதில் தனது பிள்ளை பேசினால் இனிக்கும்
வார்த்தை தடுமாறி பேரனின் ஒன்றோயிரண்டோ கேட்கும்
போகும்வரும் வாசலில் கண்கள் யாருக்கோ காத்திருக்கும்
போகாத உயிரை விட்டுவிட்டுப் பிடித்துவைக்கும்;

வாழ்நாள் கனவுகள் வந்துவந்து மறையும்
வாழ்ந்த நாட்களை அசைப் போட்டுத் திரியும்
வந்த துணையின் பிரிவதை எண்ணி –
பழுத்த மனசது பாவம் கண்ணீராய் கரையும்;

காலத்தை மனதால் கணமும் நொந்தே; நொந்தே; சாகும்!!
————————————————————————————–
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்