Tag Archives: vidhyasagar

தீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்..

உயிர் உயிர் உயிரென்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உதிர்கின்றன எம் உயிர்கள்.. தானாடாவிட்டாலும் தசையாடும் வர்கத்தின் உயிர்வாடிப் போகிற தொப்புள்கொடி உறவுகளெல்லாம் ஒவ்வொன்றாய் அறுகிறது.. மனதிற்குள் சுமக்கும் உறவில்லை உயிர் உணர்வு முழுதும் ஒரு இனமென்று கலந்த தமிழ்ரத்தமது’ சுடுகாற்றில் உறைகிறது.. சொட்டச் சொட்ட வலிக்கும் கணம் கடப்பதற்குள் ஆறாய் பெருக்கெடுக்கிறது மீண்டும் அதே தீராக் கண்ணீர்.. ஒரு … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

39, மனைவியென்பவள் யாதுமானவள்..

நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது வார்த்தைகள்.. உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும் கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை; கவிதையின் லயம் பிடித்து வரிகளாய்க் கோர்க்கிறேன் உள்ளே நீயிருக்கிறாய், என் பசியறிந்தவளாய் என் உறக்கத்தின் அளவறிந்தவளாய் என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்.. காற்று வீட்டுச் சுவர் உன் துணிகள் எங்கும் தொடுகையில் உன் முகம் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பொழுதுபோக்கின் உச்ச நட்சத்திரமது “முகமூடி” (திரை விமர்சனம்)

இயக்குனர் மிஸ்கினின் நான் பார்த்த முதல் படமிது. நான் பார்த்த படங்களில் என் கண்ணாடியைக் கழற்றுவது போல் எண்ணங்களை கழற்றிவைத்துவிட்டு அவர் கதைக்கு பின் மட்டுமே அவர் ரசித்த ரசனையோடு ஒரு இயக்குனர் என்னைக் கொண்டுசென்ற முதல் படமும் இதுவே.. என்று மெச்சத்தக்க நல்லபடம் செய்திருக்கிறார் மிஸ்கின். வெறும் கொலையெனும் முட்களை கலை எனும் வண்ண … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

3, அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது.. (சிறுகதை)

கொலம்போ விமான நிலையைம். தலையை ஒதுக்கி வாரி, தலைப்பாகையை எடுத்து மேல்கட்டிக் கொண்டு, காவித் துண்டு ஒன்றினை அகல விரித்து மார்பு முதுகு சுற்றி பின்னிடுப்பில் சொருகிக்கொண்டு, பொத்தான்போலயிருந்த மினி காமிரா ஒன்றினையெடுத்து துண்டு துண்டாக கழற்றி ஒரு காகிதத்தில் சுற்றி மடித்து அதை சாப்பாட்டுப் பொட்டலத்திற்கு நடுவில் திணித்துவைத்துக்கொண்டு தோள்பையொன்றினை எடுத்து மாட்டிக்கொண்டவாறு கழிப்பறையிலிருந்து … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

“வெங்காயம்” கடிக்க காரமென்றாலும் காணல் தகும்.. (திரைவிமர்சனம்)

எம் கிராமத்துக் குறும்புகளைப் பொருக்கி காதல்மண்ணில் ஊன்றிய கதை. மூடநம்பிக்கையின் தாலியறுத்து மாடசாமியின் கோவிலுடைக்கும் காவியுடுத்திய காடைகளை இல்லாதொழிக்கும் கதை. யதார்த்ததின் தெரு திரிந்து எம் மக்களின் வாழ்தலை திரையிலக்கியமாக்கிய படம். பசுமைமாறாத வெளியெங்கும் மிளிரும் என் எளிய மக்களின் சிரிப்பையும் அழையையும் நகர்வுகளையும் தொகுத்துக்கொள்ளும் இரு மனசுகளின் உயிர்சுரம் கூடிய சோகராகம். இசையின் ஆழம் … Continue reading

Posted in சொற்களின் போர் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்