உண்மையில் சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவு உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் தெற்காசிய சுனாமியும் ஏற்பட்டது.
இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த சுனாமி ஏற்பட்டதற்கு , இந்திய நிலத் தட்டு பர்மா நிலத் தட்டிற்கு கீழே உரசிச் சென்றதால்தான் அந்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது ,என்று நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்க நாட்டின் ஆய்வு மையத்தைச் சேர்ந்த, டாக்டர் பெஞ்சமின் பாங் சா மற்றும் டாக்டர் ரிச்சர்ட் கிராஸ் ஆகியோர், 10.01,2005, அன்று நாசா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருகிறார்கள்.
ஆனால் மூன்று மாதம் கழித்து 27.04.2005 , அன்று அதே நாசா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில்,இந்தோனேசியத் தீவுகள் அமைந்து இருக்கும் சுந்தா நிலத் தட்டிற்கு கீழே ஆஸ்திரேலிய நிலத் தட்டு உரசிச் சென்றதால்தான் நிலஅதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று முன்னுக்குப் பின் முரணாக தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
ஒரு நில அதிர்ச்சிக்கு எப்படி இரண்டு காரணம் இருக்க முடியும்?
குறிப்பாகக் கண்டங்களுக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தப் பாறைத் தட்டுகளுக்கு மேலே இருக்கும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்றும், அவ்வாறு பாறைத் தட்டுகள் நகரும் பொழுது,பாறைத் தட்டுகளின் விளிம்புகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நிலப் பகுதிகளுக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் நீளவாக்கில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் 1965- ஆம் ஆண்டு முதல் 1998 – ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தைந்து ஆண்டு காலத்தில் ஏற்ப்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட ” உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்” இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கும் இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகியிருக்க வில்லை.
( வரை படம் 1)
————————————————————————————–
இதன் அடிப் படையில் நாசா அமைப்பு வெளியிட்ட கண்டங்களின் எல்லைகளைக் குறிக்கும் வரை படத்திலும் (வரை படம்-2) கூட இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று தெரிவிக்கப் பட்டிருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
—————————————————————————–
எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் அமைந்து இருபதாகக் கூறுவதற்கும் அதே போன்று இந்திய நிலப் பகுதியும் ஆஸ்திரேலிய நிலப் பகுதியும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கும் அடிப்படை ஆதாரம் இல்லை.
எனவே இந்திய நிலத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று கூறுவதற்கும் அதே போன்று ஆஸ்திரேலிய நிலத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று கூறுவதற்கும் அடிப்படை ஆதாரம் இல்லை.
சிமிழு தீவு உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்ப்பட்டது.
குறிப்பாகக் கடந்த 26.12.2004, அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்குப் பிறகு,சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவு கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.அதனால் சிமிழு தீவின் வடமேற்குப் பகுதியில் புதிதாக கடற் கரை உருவாகி இருந்ததுடன் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தன.(வரை படம்3)
———————————————————-
எனவே இந்திய நிலப் பகுதியும் நகர வில்லை.ஆஸ்திரேலிய நிலப் பகுதியும் நகர வில்லை.உண்மையில்
சிமிழு தீவு கடல் தரையில் இருந்து நான்கு அடி உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் அதனால் கடல் நீர் புறந்தள்ளப் பட்டு சுனாமியும் ஏற்பட்டது என்ற எனது கண்டு பிடிப்பு நிரூபணமாகிறது.
” தர்ம சங்கடம் ஏற்படுத்தும் வளர்ப்புக் குழந்தை”
அமெரிக்கப் புவியியல் கழகம் வெளியிட்ட புத்தகத்தில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சேத் ஸ்டெய்ன் என்ற பேராசிரியர் கண்டங்களுக்கு நடுவில் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது? என்று ஆராய்ச்சியாளர்களுக்கு காரணம் தெரியவில்லை என்பதுடன்,இது போன்ற நில அதிர்ச்சிகளை ” தர்ம சங்கடம் ஏற்படுத்தும் வளர்ப்புக் குழந்தை” என்று குறிப்பிடுகிறார்.
நிலம் உயர்ந்ததால் நில அதிர்ச்சி ஏற்பட்டது. புகைப் பட ஆதாரம்.
1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் நாள், இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள லதூர் மாவட்டத்தில் உள்ள கிலாரி என்ற கிராமத்தில் எட்டாயிரம் பேர் உயிரைப் பறித்த நில அதிர்ச்சியின் பொழுது, கிலாரி கிராமத்தில் நிலம் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று அடி உயர்ந்து இருந்தது.

மேலும் கிலாரியில் ஏற்பட்ட நில நடுக்கதிற்குப் பிறகு கர்நாடக,ஆந்திரா எல்லைப் பகுதியில் நிலத்திற்கு அடியில் இருந்து வெண் புகை கசிந்து கொண்டிருந்தது.
முக்கியமாக நில நடுக்கத்திற்கு முன்பு கிலாரி கிராமத்தில் நிலத்தின் வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பது லாண்ட்சாட்-5 செயற்கைக் கொள் மூலம் எடுத்த படங்கள் மெல்லாம் தெரியவந்திருக்கிறது.
ஆனால் நில நடுக்கதிற்குப் பிறகு நிலத்தின் வெப்ப நிலை பழைய நிலைக்கே திரும்பி இருந்தது.
நிலம் ஏன் உயர்ந்தது?
நிலத்தின் வெப்ப நிலை ஏன் அதிகமானது?
நிலத்திற்கு அடியில் இருந்து ஏன் வெண் புகை கசிந்தது?
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு ஆறிக் கொண்டிருக்கிறது.
பாறைக் குழம்பில் இருந்து சூடான வாயுக்களும் நீரும் வெளியேறி பாறைக் குழம்பில் குளிர்ச்சி ஏற்படுவதால் அதில் பாறைத் தட்டுகள் உருவாகின்றன.
மேலும் பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் வெளியேறியதால் பாறைக் குழம்பில் உருவாகும் பாறைத் தட்டுகள் அடர்த்தி குறைவாக இருக்கிறது.
அடர்த்தி அதிகமாக இருக்கும் தண்ணீரில் உருவாகும் பனிக் கட்டிகள் அடர்த்தி குறைவாக இருப்பதால் மிதக்கிறது.
அதே போல் அடர்த்தி அதிகமாக இருக்கும் பாறைக் குழம்பில் உருவான பாறைத் தட்டுகள் அடர்த்தி குறைவாக இருப்பதால் மேல் நோக்கி உயர்கின்றன.
இவ்வாறு பூமிக்கு அடியில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகி அவைகள் மேல் நோக்கி உயரும் பொழுது, ஏற்கனவே உருவாகி மேற்பகுதிக்கு உயர்ந்த பழைய பாறைத் தட்டுகளை முட்டித் தள்ளுகிறது.
இதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் இருக்கும் நீர் மற்றும் வாயுக்களின் அழுத்தம் அதிகரித்து அவைகள் பாறைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகள் மூலம் பூமியின் மேற்பகுதிக்கு வருகின்றன.
இதனால் நிலத்தின் வெப்ப நிலை உயர்கிறது.
மேலும் பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயரும் பொழுது அவற்றின் விளிம்புகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
எனவே பூமிக்கு அடியில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகி உயர்ந்தால்தான் கிலாரி கிராமத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.
நிலம் உயர்ந்தது.
அத்துடன் நிலத்திற்கு அடியில் இருந்து வெண் புகை கசிந்து,நிலத்தின் வெப்ப நிலையும் உயர்ந்தது.
இவ்வாறு பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில நடுக்கம் ஏற்படுகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக பல ஆய்வு முடிவுகள் இருக்கின்றன.
உதாரணமாக ஐரோப்பாக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் இருக்கும் பேசல் என்ற நகரில் 1356 ம் ஆண்டு ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது.2006 ம் ஆண்டு அந்நகரில், பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பத்தைப் பயன் படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, அப்பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் ஆழத்திற்குப் பூமியில் இரண்டு இடத்தில் துளைகளையிட்டது.
ஒரு துளையின் வழியாக நீரைச் செலுத்தி அந்த நீர் பூமிக்கு அடியில் இருக்கும் பாறையின் வெப்பத்தால் நீராவியாக மற்றொரு துளையின் வழியாக வெளிவரும் பொழுது அதனைக் கொண்டு டைனமோக்களைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிப்பதாகத் திட்டம்.
ஆனால் பூமிக்குள் நீரைச் செலுத்திய எட்டாவது நாளிலேயே அந்த இடத்தில் ரிக்டர் அளவு கோளில் 3.4 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
பூமிக்குள் நீரைச் செலுத்தியதும் ஏன் நில அதிர்ச்சி ஏற்பட வேண்டும்?
நிச்சயம் பூமிக்குள் சென்ற நீரால் நிச்சயம் பாறைத் தட்டுகள் பக்கவாட்டில் நகர சாத்தியம் இல்லை.
எனவே பூமிக்குள் சென்ற நீரால் அங்கிருந்த பாறைக் குழம்பில் குளிர்ச்சி ஏற்பட்டு புதிய பாறைத் தட்டுகள் உருவாகி அவைகள் உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டது.
வட அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது?
வட அமெரிக்காவின் மதியப் பகுதியில் உள்ள நியூ மாட்ரிட் என்ற நகரில் 1811 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 1812 ஜனவரி மாதம் நிகழ்ந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது என்று இன்று வரை விளக்கப் படாமலேயே இருக்கிறது.
காரணம் கண்டங்கள் பக்க வாட்டில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது பாறைத் தட்டுகளின் விளிம்புகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால் நியூ மாட்ரிட் நகரம் வட அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கிறது.குறிப்பாக நில அதிர்ச்சியின் பொழுது அப்பகுதியில் உள்ள டென்னசி என்ற நகரில் ஐம்பது கிலோ மீட்டர் நீளத்திற்கும் இருபத்தி மூன்று கிலோ மீட்டர் அகலத்துக்கும் நிலம் உயர்ந்து காணப் பட்டது.
குறிப்பாக மிசிசிப்பி ஆறு ஓடும் கெண்டகி என்ற நகரின் தென்மேற்குப் பகுதியிலும் மிசோரி நகரின் தென் மேற்கும் பகுதியிலும் டென்னசி நகரின் வட மேற்குப் பகுதியிலும் நிலப் பகுதிகள் முப்பது அடி வரை உயர்ந்ததால் மிசிசிப்பி ஆறு ஓடும் பாதை நிரந்தரமாக மாறிவிட்டது.
எனவே நிலப் பகுதிகள் உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டது எனபது கண்கூடாகவே நிரூபணமாகிறது.
————————————————————————————————
தமிழகத்தில் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது?
1822 ஜனவரி 29 அன்று வந்தவாசியில் நில நடுக்கம்.
1823 மார்ச் 2 அன்று ஸ்ரீ பெரும்புதூரில் நில அதிர்ச்சி.
1859 ஜனவரி 3 அன்று கடலாடி போரூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம்.
1867 ஜூலை 3 அன்று விழுப்புரம் வளவனூர் பகுதியில் நில நடுக்கம்.
1882 பிப்ரவரி 28 ஊட்டியில் நில நடுக்கம்.
1900 பிப்ரவரி 8 அன்று கோவையில் நில அதிர்ச்சி..
1972 ஜூன் 26 அன்று கோவையில் நில அதிர்ச்சி.
மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் இரவில் திடீரென்று நில அதிர்ச்சி ஏற்பட்டது பாத்திரங்கள் உருண்டன,டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினார்கள்.
தமிழகத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
அந்த இடத்தில மட்டும் பூமிக்கு அடியில் உள்ள பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததே காரணம்.
எனவே நில அதிர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்படுகின்ற ஒரு இயற்கை நிகழ்வு என்பது புலனாகும்.
சில சமயங்களில் ஒரு இடத்தில் பெரிய அளவில் நில அதிர்ச்சி ஏற்படும் பொழுதுதான் அதன் அதிர்ச்சி மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மற்றபடி பாறைத் தட்டு பக்கவாட்டில் நகர்கிறது என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து.
சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள சிசுவான் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஜின்போ மலையில்,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
The fossils were discovered on the western slope of Jinbo Mountain, which stands 2,250 meters above sea level. The fossils were discovered on the western slope of Jinbo Mountain, which stands 2,250 meters above sea level.
——————————
இதன் அடிப்படையில் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் கடலுக்கு அடியில் இருந்தது என்றும் கூறுகின்றனர்.
The fossils were discovered on the western slope of Jinbo Mountain, which stands 2,250 meters above sea level. The fossils were discovered on the western slope of Jinbo Mountain, which stands 2,250 meters above sea level.
கடலுக்கு அடியில் இருந்த நிலம் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்த பொழுது ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட உயிரினங்களே இன்று ஜின்போ மலையின்மேல் புதை படிவங்களாக காணப் படுகின்றன.
எனவே மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், நில அதிர்ச்சிக்கும் நிலப் பகுதிகள் கடலின் அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து கொண்டிருப்பதே காரணம்.
இவ்வாறு நிலப் பகுதிகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
ஜாவா தீவில் மட்டும் ஏன் நில அதிர்ச்சி ஏற்பட்டது?
கடந்த 02.09.2009 அன்று இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜாவா தீவில் ரிக்டர் அளவில் 7.3 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதில் முப்பத்தி ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் இருப்பதாகவும், இந்தப் பாறைத் தட்டு வட கிழக்குத் திசையில் நகர்ந்து இந்தோனேசியத் தீவுகள் அமைந்திருக்கும் பர்மா நிலத் தட்டிற்குக் கீழே செல்வதால், பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் இந்தோனேசியாவில் நில அதிர்ச்சி ஏற்படுகிறது, என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் நேற்று ஜாவா தீவில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்?
ஏன் நேற்று சுமத்ரா தீவிலோ அல்லது அந்தமான் தீவிலோ நில அதிர்ச்சி ஏற்படவில்லை?
இந்தோ-ஆஸ்திரேலிய பாறைத் தட்டு ஜாவா தீவிற்கு கீழே மட்டும் எப்படி செல்ல முடியும் ?
இந்தோ-ஆஸ்திரேலிய பாறைத் தட்டு வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தீவுகளுக்கு கீழே எப்படி செல்ல முடியும் ?
உண்மையில் இந்தோனேசியத் தீவுகளில் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் என்ன?
இந்தோனேசியத் தீவுகளில் நூற்றி முப்பது எரிமலைகள் இருக்கின்றன.
இந்த எரிமலைகளுக்கு அடியில் உள்ள பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதில் இருந்து நீரும் வெப்ப வாயுக்களும் வெளியேறுவதால், எரிமலைகளுக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் அடர்த்தி குறைந்த பாறைகள் உருவாகின்றன.
அடர்த்தி அதிகமான திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும்.
எனவே இந்தோனேசியத் தீவுகளில் உள்ள எரிமலைகளுக்கு அடியில் புதிதாக உருவாகும் அடர்த்தி குறைந்த பாறைகள் மேல் நோக்கி உயரும் பொழுது, உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அருகில் உள்ள பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசுவதால், குறிப்பிட்ட ஒரு தீவில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
—————————————————————————————————————————————
பணிவன்புடன்
விஞ்ஞானி.க.பொன்முடி

























//மதிப்பிற்குரிய வித்யாசாகர் அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம்!
ஜியாலஜிஸ்ட் வலைத் தளத்தில் வெளியிட்ட நிலம் உயர்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்ற எனது ஆய்வுக் கட்டுரையை தங்களின் பத்திரிக்கையில் வெளியிடச் சமர்பிகின்றேன்.
தங்களின் நம்பிக்கையுள்ள,
விஞ்ஞானி.க.பொன்முடி//
பெரு மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவ்விஞ்ஞான ஆய்வுக் கட்டுரை இங்கே பதியப் பட்டுள்ளது. ஒரு மாமனிதரின் முழு முயற்சி முழு ஆய்வு நமக்கும் அதன் சார்ந்த ஆர்வத்தையும், தெரிந்துக் கொள்ள வேண்டிய விவரத்தையும் தரலாம் என்ற நோக்கில் இப்பதிவு இங்கே பதியப் படுகிறது. இதற்கான சந்தேகம் ஏதேனும் இருப்பின்; சந்தேகத்தையோ அல்லது வாழ்த்தினை தெரிவிக்க என்னுபவராயின் வாழ்த்தினையோ இங்கே பதிவு செய்யலாம்.
இக்கட்டுரையின் முழு உரிமையும் ஐயா பொன்முடி அவர்களையே சாரும்.
பெரு நன்றிகளும் வணக்கத்தொடும்…
வித்யாசாகர்
LikeLike
பெருமதிப்பிற்குரிய வித்யாசாகர் அவர்களுக்கு,
தங்களின் பாராட்டிற்கும் பதிவுக்கும் பணிவுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
விஞ்ஞானி.க.பொன்முடி.
LikeLike
மிக்க நன்றிகள் ஐயா, ராஜ் தொலைகாட்சி, கலைஞர் தொலைகாட்சி, மக்கள் தொலைகாட்சியின் மூலம் எடுக்கப் பட்ட பேட்டியின் இணைப்புகளின் மூலம் அந் நிகழ்சிகளையும் கண்டேன். தங்களை போன்றோர் தமிழராய் பிறந்து பெருமை சேர்ப்பதை எண்ணி மிகையாய் மகிழ்வு கொள்வதோடு, சுனாமியால் ஏற்பட்ட பெருந்துயரை தங்களின் கருத்துக்களை எடுத்து ஆய்வு செய்வதன் மூலம் தவிர்க்கலாம் என்கிறீர்கள், அதை மேலும் தீவிரப் படுத்தி அப்பேரழிவுகளை தடுத்து பல உயிர்காக்கும் பெரும்பணியை தாங்கள் செய்ய முயற்சித்து வருவது உண்மையிலேயே நன்றிக்கும் பெருமைக்கும் உரியதாகும். எனவே, அதுபோன்ற மேலும் ஆக்கப் பூர்வமான வெற்றிகளை தாங்கள் அடைய என் மனமார்ந்த வாழ்த்தினையும் இறையருள் வேண்டி நிற்கும் மனதினையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்!
முகநூல் பதிவுகள்
http://www.facebook.com/profile.php?id=100000872592391#!/profile.php?id=100000872592391&v=wall
கலைஞர் தொலைக்காட்சியில் 25.05.2009,அன்று ஒளிபரப்பான சந்தித்த வேளையில் நிகழ்ச்சி:-
http://www.youtube.com/watch?v=7swH78CqSWI
http://www.youtube.com/watch?v=vUKVsZHQOFg
http://www.youtube.com/watch?v=CctDzG65STU
http://www.youtube.com/watch?v=RvtfB23LbEQ
http://www.youtube.com/watch?v=CWnq9a39owo
ராஜ் தொலைக்காட்சியில் 01.11.2009, அன்று நேரடியாக ஒளிபரப்பான மக்கள் மேடை நிகழ்ச்சி:-
http://www.youtube.com/watch?v=jmA_BN2-92o
http://www.youtube.com/watch?v=Xtw34GL80Lw
http://www.youtube.com/watch?v=vb9G-0Aa4RE
http://www.youtube.com/watch?v=U8dOW1pzF1g
http://www.youtube.com/watch?v=jmA_BN2-92o
LikeLike
பிங்குபாக்: Thamili.com
இந்த ஆக்கம் எனது அறிவுப்பசிக்கத் தீனி போட்டுள்ளது.. இப்படி இன்னும் எடுத்த விடுங்கோ சகோதரா…
LikeLike
மிக்க நல்லது மதி. நம் பதிவுகளை பதியவே நேரமில்லை. அதில் வேறு பிறர் பதிவை பதிவதில் அனுமதி சிக்கல்கள் உள்ளன. இது அவர்காவே நமக்கு அனுப்பி உதவிய பதிவு. அவரும் இதில் மறுமொழி இட்டிருப்பதால் அநேகம் உங்களின் ஆர்வத்தை கண்டிருப்பார். அனுப்பினால் உடனே பதிகிறேன்!
தங்கள் அன்பிற்கு மறுமொழிக்கு நன்றி!
LikeLike
அறிவு சார்ந்த செய்திகள் கட்டுரைகள் பயனளிக்கும் விதத்தில் வெளியிடுவது பாராட்டுக்குரியது மட்டுமல்ல.. நன்றிக்குரியதும் கூட…!
LikeLike
நன்றி ஐயா. பொன்முடி ஐயா கண்டால் மகிழ்வார்கள். மேலும் சில கட்டுரைகளும் பதிய வந்துள்ளன. நேரம் கிடைக்கையில் பதிவிடுகிறேன். தங்களின் கருத்தளிப்பிற்கும் நன்றி.
நாம் சேர்ந்து கூட்டினாலன்றி நம் குப்பைகள் வாரி அகற்ற இயலாது. இயன்றதை இயன்றவரை எல்லோரும் செய்வோம்… மிக்க அன்பும் வணக்கமும்!!
LikeLike
நம் தமிழ் மண்ணுக்குள் இத்தனை மாணிக்கமா? இன்னும் காணக் கிடைக்காமல் மறைவாக இருந்து மறைந்து போன செல்வங்கள் எத்தனையோ? அனைவருக்கும் மனசிருந்தால் தாங்கள் சொன்னபடி விரைவாக குப்பைகளை அல்லுவதோடு மட்டுமல்லாமல் தூரமாக அதைக் கொட்டவும் முடியுமே அண்ணன் வித்யசாகரர் அவரகளே. அதற்கும் ஒரு முயற்சி எடுத்தால் துணை நின்று முடிக்க நாமிருக்கிறோம்.
அய்யா பொன்முடி அய்யா நீடூழி வாழ்க; வளம் பல பெருக!
துணை நின்ற வித்யசாகரரும் இன்னும் பல சிறப்புற வாழ்க!!
சரவணன்
கத்தார்
LikeLike
மிக்க நன்றியும் அன்பும்பா, பல முனைகளில் தொக்கி நிற்கிறோம், எங்குமே எதிலுமே சரியான முடிவின்றியே முயன்றுக் கொண்டுள்ளோம். எல்லாவற்றிற்குமான வழி இனி; உங்களைப் போன்று, இத்தனைப் பற்றும், சமூகம் சார்ந்த அக்கறையும், துடிப்பும் உள்ள இளைஞர்களாலும்’ அவர்களை தக்க வழியில் வழிநடத்தி முன் செல்லும் நம் பெரியோர்களாலும் நடக்குமென நம்பி நம்மால் இயன்றதை இயன்றளவு செய்யப் பணிவோம்..
LikeLike