வெற்றுப் பிணம் நாம்!!! (20)

னதின் –
நீள அகலங்களில்
எத்தனையோ, கண்ணீரின் சாரல்கள்;

வெளியில் தெரியாமல்
உள்ளழுத்தும் வலிகளுக்கு
எல்லோரும் மருந்திட்டுவிடுவதில்லை;

எதையோ தேடி
யாரையோ நினைத்து
எங்கோ மனது கிடந்து அலையும் தருணங்களில்
அழுதுவிடாத வருத்தங்கள்
சுடத் தான் செய்கின்றன;

வெற்றியை தலைமேல் சுமந்து
எத்தனை தெருக்களில்
நடந்துத் திரிந்தாலும்
தோற்கும் வினாடிகள்
வெற்றியின் சிகரத்தை வீழ்த்தாமலில்லை;

என்ன வென்று..
என்ன சிரித்து..
என்ன மகிழ்ந்தென்ன
உயிரற்று வீழுகையில்
வெறுங்கட்டையாய் எரியும்
வெற்றுப் பிணம் தானே நாமெல்லாம்???
——————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

3 Responses to வெற்றுப் பிணம் நாம்!!! (20)

  1. swami's avatar swami சொல்கிறார்:

    sdfdsf

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      என்ன தான் சொல்ல வருகிறாயடா உன் கவிதையில் என்கிறீர்களா சாமி. வேறொன்றுமில்லை, நம் முடிவு தான் இப்படியெல்லாமிருக்க, வாழ்வின் அர்த்தமும் பிடிபடாமலிருக்க, முடிவையும் நம்மால் தீர்மானிக்க இயலாத நிலையில் எதற்கு சுயநல கேடுகளும், பொறாமையும், தானென்ற அகம்பாவமும், பிறரை கெடுக்கும், ஏமாற்றும் வக்கிரமும்???

      இருக்கும் வரை மனிதர் நம் எல்லோரின் நிலையும் இது தானெனப் புரிந்து, ஒருவருக்கொருவர் ஆறுதலாய் அரவணைப்பாய் உதவியாய் புழங்கி, அன்பு செலுத்தி விட்டுக் கொடுத்தலில்; மனிதன் எரிந்து கரிக்கட்டையாய் வீழ்ந்தாலும் – உதிரும் சாம்பலில் ‘இந்த பிணம் ஒரு மனிதனுக்கானது’ என்ற அடையாளத்தையாவது மிச்சம் வைத்துவிட்டுச் செல்வோமே” என்பதன் அர்த்தமே அந்த கவிதைக்கான மறை முகக் காரணம்.

      வருகைக்கு மிக்க நன்றி சாமி. தொடர்ந்து படியுங்கள். இயலுமெனில் விமர்சனம் சொல்லுங்கள்!

      Like

  2. siva's avatar siva சொல்கிறார்:

    என்ன வென்று..
    என்ன சிரித்து..
    என்ன மகிழ்ந்தென்ன
    உயிரற்று வீழுகையில்
    வெறுங்கட்டையாய் எரியும்
    வெற்றுப் பிணம் தானே நாமெல்லாம்???

    Like

siva -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி