Daily Archives: மார்ச் 1, 2010

50. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

காவியங்களாய் பல காதல் – காலங்காலமாய் உண்டு! கால்கொலுசின் சப்தம் கேட்டு காதல் வந்த நம் உள்ளூர் கதைகளும் உண்டு! ஜாதி எரிந்து உயிர் கொளுத்திய அரக்கத் தன – சம்பவங்களும் உண்டு! மதம் தனக்கு இரையாக்கிக் கொண்ட காதலர்களின் கதறலில் பெற்றோர் – தனக்கான மானத்தை மட்டும் வென்று மனிதம் கொன்ற அவலமும் உண்டு! … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 25 பின்னூட்டங்கள்

49. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

பேருந்தில் – நீயும் நானும் அருகருகே அமர்ந்து செல்கிறோம் – மனதளவில் தூரம் தான் வானமும் பூமியுமாய் நீள்கிறது. வா ஒரு சின்ன தொடுதலில் பேசலில் முத்தமிடலில் மனமொன்றி வாழ்தலில் வானத்தையும் பூமியையும் ஒன்றாக்குவோம்; வா!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்