Daily Archives: மார்ச் 23, 2010

ஹைக்கூ – 130

படிக்காத புத்தகத்தை படித்ததாகவே எழும் மனப்போக்கு – நீ பார்கையில் பார்த்து கண் மூடிக்கொள்ளும் மனதிற்குள் வெளிச்சமாய் நிறைகிறது!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 129

வானின் – நிறைய வெற்றிடங்களை தாண்டி இடம் கொள்கிறது மேகமாய் உன் நினைவு!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 128

எதையோ கிறுக்கி எதையோ எழுதி எதையோ உளறி எதையோ பேசி எதையோ செய்துதொலைத்ததில் என் வெள்ளை சட்டை மறைத்துத் தான் கொள்கிறது என் அசிங்க முகத்தை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 127

வெள்ளையும் கருப்புமாய் வாழ்ந்த என் – அப்பாம்மாவின் காலம் எனக்கு வண்ணமாகவே தெரிகிறது!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 126

செவ்வகம் சதுரம் முக்கோணம் நீளம் அகலம் நெட்டை குட்டை என எல்லாம் இருக்கிறது புத்தகத்தில் யாரோ ஒருவனின் கணித தோல்வியை ஒன்றிரண்டு மதிப்பெண்களில் மறைத்துக் கொண்டு!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக