Daily Archives: மார்ச் 29, 2010

பிரிவுக்குப் பின் – 50

மழை பெய்த ஈரத்துணி வாசத்தில் மணக்கிறது – நீ என் தலை துவட்டிய உன் – ஈரப் புடவையின் வாசம்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 49

உன் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த உன் – விட்டு சென்ற சுடிதார்களை பார்க்கையில் தெரிந்தது; உன்னை விட்டிருப்பது எத்தனை கடினமென்று!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 48

இருந்துமாய் இல்லாததுமாய் தான் நகர்கிறது – நம் வாழ்க்கை; குவைத்திற்கும்.. சென்னைக்கும்.. நடுவே!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 47

நீயும் நானும் பிரிந்த சந்தோசத்தில் இந்த – வெள்ளைத்தாள் காதலனுக்கு எழுத்துக் காதலி கிடைத்துவிட்ட – பூரிப்பில் – எப்படி இருவரும் கவிதையாய் சிரிக்கிறார்கள் பார்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 46

சாப்பிடும்போது உணவில் – பாதியை வைத்துவிட்டு எழுந்தேன்; அம்மா திட்டினாள், அவளுக்கென்ன – தெரியும் நீயும் – இப்படி பாதியில் வைத்துவிட்டுத் தான் எழுந்திருந்திருப்பாய் என்று!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்