பிரிவுக்குப் பின் – 42

ன்று தீபாவளி
நம் ஊரில் இந்நேரம்
பட்டாசெல்லாம் வெடித்து
புதுத் துணியெல்லாம்
உடுத்தியிருப்பீர்கள் –
இங்கு என் மனசும்
உன் நினைவுகளால்
பட்டாசை வெடித்துக் கொண்டுதானிருக்கிறது;
நீ அனுப்பிய எனக்கான
புதுத் துணி –
அலமாரியில் வேதனையின் கனமாய்
கனத்துக் கொண்டிருக்க –
அருகாமை நண்பர்கள் தந்த
இனிப்புக் கூட –
எப்படிக் கசக்கிறதோ தெரியவில்லை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக