Monthly Archives: மார்ச் 2010

பிரிவுக்குப் பின் – 27

முத்தம் கொடுக்கும் ஆசையிலேயே வாழ்க்கை – கணக்க முகம் பார்கவே வருடம் இரண்டு ஆகுதடி; காமம் தலைக்கேறி அமர்ந்து உடல் வருத்தியும் – உள்ளம் உனக்காக உனக்காக – உனக்காகவே நரை தின்று வாழுதடி! குளிர்பெட்டி தின்ற மிச்ச மீதியில் உடல் கட்டை பிழைக்குதடி – இது வாழ்க்கை இல்லை – விதிதானே நிமிஷம் கூட … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 4 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 131

சொட்டு சொட்டான விசமாக – தெருவிற்கு தெரு குடியும் பெண்களின் மோகமும் அரசியல் சாபமும் போலிகளின் கொண்டாட்டமும் இன்ன பிறவும் இன்ன பிறவும் சேர்ந்திறங்கிக் கெடுத்த நம் வாழ்வின் வெளிச்சத்தை மீட்டுத் தர இன்னொரு தாமஸ் ஆல்வா எடிசனை தேடும் நீயும் நானும் – இருந்தென்ன பயனென்று தான் உதிர்கிறது போல்; என் தலைமுடியில் இரண்டு!

Posted in உடைந்த கடவுள் | 8 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 130

படிக்காத புத்தகத்தை படித்ததாகவே எழும் மனப்போக்கு – நீ பார்கையில் பார்த்து கண் மூடிக்கொள்ளும் மனதிற்குள் வெளிச்சமாய் நிறைகிறது!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 129

வானின் – நிறைய வெற்றிடங்களை தாண்டி இடம் கொள்கிறது மேகமாய் உன் நினைவு!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 128

எதையோ கிறுக்கி எதையோ எழுதி எதையோ உளறி எதையோ பேசி எதையோ செய்துதொலைத்ததில் என் வெள்ளை சட்டை மறைத்துத் தான் கொள்கிறது என் அசிங்க முகத்தை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக