Monthly Archives: மார்ச் 2010

ஹைக்கூ – 122

ஒவ்வொரு பிணமாய் வீழும்போதும் மனிதன் தன்னை சாகாவரம் பெற்றதாகவே நினைத்துக் கொள்கிறான்; மரணம் மட்டும் நிகழாதிருக்குமே யானால் மனிதன் கொள்ளும் முதல் நபர் கடவுளாகவும் இருக்கலாம்!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 121

செரிப்பதற்கு இனிப்பும் ரசமும் சோடாவும் குடிப்பவனுக்கு பசிப்பவனை பற்றிய சிந்தனை அற்றுப் போன இடத்திலிருந்தே முளைத்துக் கொள்கிறது உலகின் அத்தனை போராட்டங்களும்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 3

குழந்தை கையோடு புத்தகம் நீளப் பயணங்களில் நிறைவில்லா தனிமைகளில் ஒரு புத்தகமோ இல்லை ஒரு கைக்குழந்தையோ என் கையில் தவழ்ந்தால்-எனக்கு போதுமாயிருக்கும்; இரண்டுமே… சூலடைந்து கருசுமந்து வெளிவந்த படைப்புகள்தானே…! இரு கையில் ஏந்தி எடுக்க இதழ் திறக்க உச்சிமுகர ஒரு நிமிடம் தியானிக்க…அந்த பாலின் வாடைக்கும்- பச்சைத் தாளின் வாடைக்கும்- எனது தாயின் நினைவு உள்ளூறித் … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | பின்னூட்டமொன்றை இடுக

நித்தியானந்தா + நாம்

கிறுக்கு – மனோபாவத்தின் தந்திர வித்தைகளில் மறைந்த வக்கிரத்தை காவி மறைத்துக் கொண்ட தைரியத்தில் எதையோ பொய்யென்றும் எதையோ உண்மையென்றும் நம்பிவிட்ட கண்கட்டப் படாத பொதுமக்களின் குருட்டு நம்பிக்கையில் காலம் காலமாய் காம நெருப்பிட்டு உறங்கியவனின் மோக மெத்தையில் – எவர்வைக்கும் தீயும் அவன் தலைமுடியை கூட சுடவில்லை! ————————————–

Posted in கவிதைகள் | 8 பின்னூட்டங்கள்

இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்!

நிறைய அலமாரிகளில் பணம் அடுக்கப்பட்டு வயிறுகளில் பசி இறுகக் கட்டி பட்டில் ஆடையுடுத்தி மாற்றுப் புடவைக்கு பிச்சையெடுத்து விமானத்தில் நடுக்கடலில் பட்டப்பகல் – நட்டநடுத் தெருவில் வாகன நெரிசலுக்கிடையே திருமணம் நடத்தி முதிர்கன்னிகளை ஆங்காங்கே திரியவிட்டு பெண்களின் கற்பு பேசி விலைமகள்களுக்கு – வீடமைத்துக் கொடுத்து ஜனநாயக தேசமென மார்தட்டி – எடுத்ததற்கெல்லாம் ஜாதி கேட்டு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 2 பின்னூட்டங்கள்