25 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

வா..
அந்த மரத்தில்
ஒரு சொப்பு தூளி கட்டி
அதில் காகிதம் சுற்றி
அந்த காகிதத்தில்
உன் பெயரையும் என் பெயரையும்
எழுதினால்
சாமி நம்மை சேர்த்து விடுமாம்;

நாமும் கட்டி வைப்போம்
நம் சமூகம் ஒருவேளை
நம்மை பிரித்துவிட்டால்
இந்த சொப்பு தூளி –
நம்மை காதலர்களென்று சொல்லியே
ஆடிக் கொண்டிருக்கும்!!
——————————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக