Daily Archives: ஜூலை 8, 2010

5 உடைந்த கடவுள்!!

ஊரெல்லாம் இருந்த குளங்கள் பிளாட் போட்டு விற்பனையாகி விட்டது;   ப்ளாட்டிற்குள் ஸ்விமிங் புல் கட்டியாகி விட்டது;   ஸ்விம்மிங் புல்லின் கரையில் இருந்து நினைத்துக் கொள்கிறோம் – குளக் கரையின் சில்லென்ற காற்றை,   ஸ்விம்மிங் புல் சிரித்துக் கொண்டது. குளக்கரை நம் கைவிட்டு எங்கோ போனது.   ஏதோ ஒரு விதத்தில் ஏற்பட்ட இழப்பை வளர்ச்சி என்றே சொல்லிக்கொள்கிறோம் நாம் மட்டும்! ————————————————————

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

4 உடைந்த கடவுள்!!

தெருவெல்லாம் சுத்தம் செய்தான்,   சாக்கடை நீரில் இறங்கி தூர் வாரினான்,   உடைந்த சுவரு பூசி மெழுகி கொடுத்தான்,   இரவு கருக்கையில் தெருவோரம் விழுந்துக் கிடந்தான் – மது அவனை குடித்திருந்தது.   வெறும் நாற்றமென்று மூக்கை பிடித்து ஒதுங்கி சென்றோ – குடிகாரன் என்ற ஒற்றை வார்த்தையிலோ சுருங்கி அடங்கிப் போகிறோம் நாம்;   மானுடம் வலுக் … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

3 உடைந்த கடவுள்!!

ஒவ்வொரு முறை கண்ணாடிக் குவளையில் தண்ணீர்  ஊற்றும் போதும் –   விஸ்கியின் சிவந்த நிறம் குவளையிலிருந்து இதயம் வரை நிரைகிறதாம்; நண்பன் சொன்னான்.   எனக்கு, எங்கோ யாரோ சாப்பிடாமல் பட்டினியில் உயிர் விட்ட ஒரு சோற்றுப் பொட்டலத்தின் விலை பத்தோ இருபதோ – நினைவிற்கு வந்தது!! ———————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

2 உடைந்த கடவுள்!!

என்றோ பல ஆண்டுகளாய் பூமியில் புதைந்து கிடக்கிறது தங்கம்; தோண்டி எடுத்தவன் தானே செய்ததாக சொன்னான், செம்மொழி! ———————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1 உடைந்த கடவுள்!!

பசையோடு கையும் தேய போஸ்டர் ஒட்டிய எந்த பாட்டாளியையும் எந்த தலைவனுமே திரும்பிப் பார்ப்பதில்லை; பாட்டளிகளின் சாமியறையில் மட்டும் எப்படியோ மாலையும் பொட்டுமாய் நிறைய பேர் வெட்டியாக!! ——————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக