கோவிலில்
பிரசாதம் தருகிறார்கள்.
நீ ஓடிவந்து ஓடிவந்து
வாங்கினாய்.
நான் கூட
ரொம்ப பசியோ என்று நினைத்தேன்.
பிறகு வெளியே வருகையில்
எனை வாழ்த்திய
பிச்சை காரர்களால் புரிந்தது –
நீ எனை பார்க்கத் தான்
அத்தனை முறை வந்து போனாய் என்று!!
—————————————————–
























