மனதில் கனக்கின்றன
சில முகங்கள்,
என்னால் நேரே அவர்களை பார்த்து
பேசிட இயலாத பழைய முகங்கள்.
ஆனால் இப்பொழுது முடிகிறது
அனிச்சையாய் அது நிகழ்கிறது
முகம் பார்த்து
இரண்டு கண்களை
நேராக பார்த்து மட்டுமே பேசுகிறேன் நான்;
ஆனால் அன்று முடியாததன் காரணம்,
இன்றும் நிறைய பேர்
நேராக பார்த்துப் பேச விருப்பம் கொள்ளவோ
இயலாமலோ ‘தவிக்கச் செய்வதன் காரணம்,
என்னை நானே உற்று நோக்க
இயலாமல் தவிக்கும் தவிப்பாய் நீள்கையில்,
எதிர்படுகிறாய் நீ –
உன்னை எல்லோரும் கடவுள் என்கிறார்கள்;
உன்னை என்னால் பார்க்க இயலாமையில்
உன்னை நான் காணாத பட்சத்தில்
நான் குருடனாகவோ அல்லது – நீ
இல்லாததாகவோ கருதப் படுகிறது!!
———————————————————-
பிங்குபாக்: தமிழி..